உலக கிரிக்கெட்டில் சிறந்த வீரர்களில் ஒருவர் விராட் கோலி. இவர் கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கவும் சச்சினின் பல சாதனைகளை முறியடித்து தந்கக்கேன ஒரு பெயரை உருவாக்கி வைத்திருக்கிறார். மேலும் விராட் இந்திய அணியின் கேப்டனாக இருந்த போது இவரது தலைமையிலான இந்திய அணி பல போட்டிகளில் வெற்றியும் பெற்றிருக்கிறது. இந்நிலையில் விராட் கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில் ரோஹித் ஷர்மா கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தி வருகிறார்.

மேலும் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்து வருகிறார். இப்படிபட்ட நிலையில் கேப்டன் ரோஹித் மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கிறது. இந்த சுற்றுப்பயணம் வரும் டெஸ்ட் சாம்பியன் ஷிப் உலக கோப்பை 2023- 24 சுழற்சியில் இடம் பெறுவதினால் வெற்றியுடன் அதனை தொடங்க இந்திய முனைப்பு காட்டி இருக்கிறது.
விராட் கூறியது :
இந்நிலையில் விராட் சமீபத்தில் ஐசிசி-யைக்கு கொடுத்த பேட்டியில் கூறுகையில் “நாங்கள் டிரஸ்ஸிங் ரூமிற்க்கு செல்லும் போதும், பயிற்சிக்காக டொமினிகா மைத்தனத்தில் விளையாடும் போதும் ஒரு டெஸ்ட் வீரராக என்னுடைய முதல் டெஸ்ட் போட்டியானது நினைவுக்கு வருகிறது. இந்த நாட்டில் இருந்துதான் அனைத்தும் தொடங்கியது. 12 வருடங்கள் கழித்து 100 டெஸ்ட் போட்டிகளுக்கும் மேலாக விளையாடிவிட்டு மீண்டும் இங்கு வைத்திருப்பது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நினைத்து கூட பார்க்கவில்லை என்றார் விராட்.

மேலும் தான் ராகுல் டிராவிட் அவர்களிடம் பயிற்சி எடுப்பதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும், கடந்த 2011ஆம் ஆண்டு இங்கு விளையாடிய இரண்டு வீரர்கள் மட்டுமே இந்து வைத்திருப்பது, வாழ்கை ஒரு வட்டம் என்பதை காட்டுவதாகவும் கூறினார் விராட் கோலி. இதனிடையே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் பேசுகையில் விராட் கோலி குறித்தும் இங்கு மீண்டும் வந்தது குறித்தும் பேசினார்.

ராகுல் டிராவிட் கூறியது :
2011ஆம் ஆண்டிற்கு பிறகு ஒரு தலைமை பயிற்சியாளராக இங்கு வந்திருப்பது எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஓன்று. அந்த தொடரின் போது இருந்த வீரர்களில் விராட் கோலி மட்டும் தான் தற்போது கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கிறார். எனக்கு தெரிந்த வரையில் விராட் கந்த 2011முதல் இந்த ஆண்டு வரையிலான தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை கண்டிப்பாக நேசிப்பார். இதனை நான் பார்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
கடந்த 2011ஆம் ஆண்டு முதல் முறை இங்கு வரும் போது விராட் கோலி சிறுவனாக இருந்தார். அவர் ஒருநாள் போட்டியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். ஆனால் அவரிடம் ஸ்பெஷலாக எதோ ஓன்று இருக்கிறது. நான் அவருக்கு பயிற்சியாளராக வருவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. இப்போது நான் ஒரு இளமையான் பயிற்சியாளர். இப்போதுதான் தொடங்கி இருக்கிறேன். ஆனால் விராட் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேலே ஆடிவிட்டார், நிலைமை தலைகீழாக மாறிவிட்டது என்றார் ராகுல் டிராவிட்.





