இந்தியா VS ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வர்ணனையாளரும் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி எல்லை மீறி பேசியுள்ளார் என்று பலர் அவரை விமர்சித்து வருகின்றனர். உலகம் முழுவதும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் காத்துக் கொண்டிருந்த 2023 காண ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி 5 ஆம் தேதி முன்பு தொடங்கியது. அதில் ஐந்தாவது போட்டியில் இந்தியா அணி மற்றும் ஆஸ்திரேலியா அணியின் மோதினர். அதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதன் பின் நேற்று இந்திய அணி ஆப்கானிஸ்தான அணியை எதிர்கண்டது அதில் முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்யது பேட்டிங்கை தேர்வு செய்தது.

நேற்றைய போட்டி
அதன்படி களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள். இப்ராஹிம் சத்ரான் 22 ரன்களில் பும்ராவிடம் அவுட் ஆகி வெளியேற அதன் பின் குர்பாஸ் 21 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இந்நிலையில் நிதானமாக விளையாட நினைத்த ரஹ்மத் 16 ரன்களிலே தாக்கூர் வீசிய பந்தில் அவுட் ஆகி வெளியேற அதன் பின் அஸ்மத்துல்லாஹ் நிதானமாக வெளியே அடி 66 ரன்களை குவித்தார். அவருடன் இணைந்து விளையாடி ஷாஹிதி 80 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.
இந்திய அணியின் பந்து வீச்சை சமளிக்க முடியாமல் ஆப்கானிஸ்தான அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 50 ஓவர் முடிவில் 272 ரன்களுக்கு எட்டு விக்கெட்டுகளை இழந்தது. 273 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய இந்திய அணியின் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான ரோகித் சர்மா மற்றும் இஷாந்த் கிஷன் ஆரம்பம் முதல் அதிரடி காட்டி ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீசை நான்கு பக்கமும் சிதறடித்து வந்தனர். ரோகித் சர்மா 63 பந்துகளில் தன்னுடைய சதத்தை நிறைவு செய்தார். மேலும் இருவரும் இணைந்து விக்கெட் இழப்பின்றி 150 ரன்களை குவித்தனர்.

மற்றொரு பக்கம் விளையாடி கொண்டு இருந்த இஷாந்த் கிஷன் 46 பந்துகளில் 47 ரன்களை அடித்த நிலையில் ரஷித் கான் வீசிய பந்தில் விக்கெட்டை இழந்தார். அதன் பின் வந்த விராட் கோலி ரோஹித் சர்மாவுடன் இணைத்து பந்து வீச்சை சிதறடித்து வந்தனர். அதன் பின் அவர் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேற அதன் பின் விராட் கோலி 55 ரன்களும் ஸ்ரேஸ் ஐயர் 25 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
ரவி சாஸ்திரி கூறியது:
ஹிந்தியில் நேரலை தொலைக்காட்சியில் வர்ணனை செய்து கொண்டிருந்தபோது அங்கு நவீன் உல் ஹக்கை பார்த்தால் பரிதாபமாக உள்ளது என்றும் வர்ணனையாளர்கள் கூறி வந்தனர். அப்போது நேரலையில் பேசிய ரவி சாஸ்திரி நவீன் உல் ஹக் தன் வாழ்நாளில் எங்கு போய் விளையாடினாலும் அங்கு கோலி கோலி என்று கசத்தத்தை தான் அவர் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்றும் இந்த போட்டி முடிந்த பிறகு கோழியின் பெவிலியனுக்கு தான் செல்ல வேண்டும் என்றும் நேரலையில் நவீன் உல் ஹக்கை மட்டம் தட்டி பேசினார். ஒரு மூத்த வர்ணனையாளர் இப்படி பேசலாமா என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொலைக்காட்சியில் அவரை காட்டிய போது அவர் கண்கள் சொருகி நிலையில்தான் இருந்தது. அதை வைத்து அவர் மது அருந்தி விட்டு பேசுகிறார் என்று பலரும் அவரை விமர்சித்தனர். மேலும் அவர் பாகிஸ்தான் போட்டியை பற்றி கூறுகையில் அடுத்து இந்தியா பாகிஸ்தான் போட்டி நடக்கும் அகமதாபாத் மைதானத்தில் மருத்துவமனையின் படுக்கை வசதிகளை தயார் செய்ய வேண்டும் என்றும் வன்முறையை தூண்டும் வகையில் பேசி இருந்தார். அதனை சிலர் வேடிக்கையாக நகைச்சுவையாக எடுத்துக் கொண்டாலும் பலர் இப்படி மொத்த வர்ணனையாளர் பேசலாமா என்று அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர் பயிற்சியாளராக இருந்தபோது மது அருந்திவிட்டு மைதானத்திற்கு வந்த சம்பவங்களும் நடைபெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




