மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியாது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.இடஙக சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் அற்புதமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இரண்டாவது போட்டியிலும் வெற்றியை பதிவு செய்தது.
இதனால் இந்த போட்டியில் இந்தியா வெற்றியடைந்தே ஆகவேண்டும் என்று சூழ்நிலையில் யஷஸ்வி மற்றும் சுப்மன் கில் ஆட்டமிழந்த பிறகு பொறுமையாக நின்று விளையாடிய திலக் வர்மா மற்றும் சூரிய குமார் யாதவ் இருவருமே இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு முக்கியமான ஒரு காரணமாக இருந்தார்கள். ஏனென்றால் விக்கெட்டுகள் விழுந்த போது வந்த இவர்கள் இருவரும் பொறுமையாக ஆடி 3வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
Tilak Varma needed one run to score his fifty and Hardik Pandya hit a six to win the game.
— Abdullah Neaz (@Abdullah__Neaz) August 8, 2023
Your thoughts?🤔#INDvsWI #WIvsIND #TilakVarma #HardikPandyapic.twitter.com/gBdIDjps3e
மேலும் கடந்த 2 இந்தியா மிகவும் மோசமாக விளையாடிய நிலையில் திலக் வர்மா மட்டுமே அற்புதமாக விளையாடினார். சொல்லப்போனால் முதல் போட்டியில் 39 ரன்களும் இரண்டாவது போட்டியில் 51 ரன்களையும் எடுத்து இந்தியா அணிக்கு மோசமான தோல்வியை சந்திக்காமல் இருக்க போராடினர். அதே போலத்தான் 3வது போட்டியிலும் திலக் வர்மா 4 பவுண்டரி 1 சிக்சருடன் 49 ரன்களை விளாசியிருந்தார்.
Don't you dare to compare chhapri #HardikPandya with this legend#MS #Dhoni pic.twitter.com/YT7okz9D7j
— PJ says (@PjPriyank2) August 8, 2023
ஆனால் அவர் அரை சதம் அடிக்க வாய்ப்பு இருந்தும் கூட அடிக்க முடியவில்லை. அதாவது 18 வது ஓவரில் 5வது பந்தில் சிங்கிள் எடுத்தால் இந்தியாவின் ஸ்கோர் 158/3 என்ற நிலைமைக்கு வரும் என்பதால் கடைசிப் பந்தில் சிங்கிள் அல்லது பவுண்டரி அடித்து திலக் வர்மா அரை சதத்தையும் விளாசுவர் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அந்த அந்த பந்தில் ஹர்திக் பாண்டியா 5வது சிக்ஸர் அடித்து போட்டியை முடித்து வைத்தார்.
இதனால் கோபமடைந்த ரசிகர்கள் கடந்த 2 போட்டிகளில் இரு கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் சொதப்பி விட்டு தற்போது ஒரு இளம் வீரர் போராடி அரை சதம் அடிக்கும் நேரத்தில் இப்படி செய்தது நியாயமான என்று ஹர்திக் பாண்டியவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேலும் இந்த நிகழ்வை கந்த 2014 டி20 உலக கோப்பை இந்தியா vs தென்னாப்பிரிக்கா போட்டியின் போது முக்கியமான அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா திணறிய போது விராட் கோலி போராடி வெற்றியை கொண்டு வந்தார். ஆனால் விராட் சிங்கிள் எடுக்கும் போது அது ஆட்டமானது 172 என சமன் ஆனது. இதனால் அப்போது ஸ்ட்ரைக்கில் இருந்த தோனி கடினமாக உழைத்து வெற்றியை தேடி கொடுத்த விராட் கோலியை ஃபினிஷிங் செய்ய சொன்னார். அது இனமும் ரசிகரக்ள் மனதில் நினைவிருக்கிறது.

ஆனால் இந்த போட்டியில் இன்னமும் 2 ஓவர்கள் மீதம் இருந்தும் ஹர்திக் பாண்டியா இப்படி செய்தது ரசிகர்கள் அனைவருக்கு கோப்பைதயும் உருவாக்கி உளள்து. மேலும் தோனியின் இடத்திற்க்கு நீங்கள் என்ன செய்தலும் வரவே முடியாது என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றார் நெட்டிசன்கள்





