
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இறுதிப் போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அவர்கள் அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகளுடன் வெளிநாட்டில் தொடரை எதிர்கொள்கிறார்கள். இந்த சுற்றுப்பயணம் அடுத்த மாதம் தொடங்கும், இதற்கான அட்டவணை ஜூன் 12 திங்கள் அன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் வெளியிட்டது.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் மென் இன் ப்ளூ இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடும். ஜூலை 12 முதல் 16 வரை டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க்கில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியுடன் பல வடிவ தொடர் தொடங்கும். இரண்டாவது டெஸ்ட் டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் ஜூலை 20 முதல் 24 வரை நடைபெறும். இந்தத் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2023-25 சுழற்சியின் ஒரு பகுதியாக இருக்கும்.
டெஸ்ட் போட்டியை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது. முதல் ஒருநாள் போட்டி பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் ஜூலை 27ம் தேதியும், இரண்டாவது போட்டி ஜூலை 29ம் தேதி பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்திலும் நடைபெறும். மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமியில் ஆகஸ்ட் 1ம் தேதி நடக்கிறது.
🚨 NEWS 🚨
— BCCI (@BCCI) June 12, 2023
2️⃣ Tests
3️⃣ ODIs
5️⃣ T20Is
Here's the schedule of India's Tour of West Indies 🔽#TeamIndia | #WIvIND pic.twitter.com/U7qwSBzg84
இந்தியாவின் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் 2023 ஐந்து போட்டிகள் கொண்ட T20I தொடருடன் முடிவடையும். முதல் டி20 போட்டி டிரினிடாட்டில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமியில் ஆகஸ்ட் 3ஆம் தேதி நடைபெறுகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் முறையே ஆகஸ்ட் 6 மற்றும் ஆகஸ்ட் 8ஆம் தேதி கயானாவில் உள்ள தேசிய மைதானத்தில் நடைபெறும்.

T20I தொடரின் கடைசி இரண்டு ஆட்டங்கள் முறையே ஆகஸ்ட் 12 மற்றும் ஆகஸ்ட் 13 ஆகிய தேதிகளில் புளோரிடாவில் உள்ள Broward County ஸ்டேடியத்தில் நடைபெறும். என்றும் BCCI அட்டவனையை வெளியிட்டது.




