இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலியும் 2022 t20 உலகக்கோப்பைக்கு பின்னதாக எந்த ஒரு டி20 போட்டியை விளையாடவில்லை. அவர்கள் இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பையில் 20 அணிகள் கலந்துகொள்ள உள்ளது. அதற்க்கு இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இந்திய அணியில் இருக்க வேண்டும் என்றும் இர்பான் பதான் கருத்து தெரிவித்து இருந்தார்.

நடந்து முடிந்த உலகக்கோப்பையில் விராட் கோலி தான் அதிக ரன்களை அடித்துள்ளார். அதற்க்கு அடுத்த படியாக ரோஹித் ஷர்மா இரண்டாவது இடத்தில் இருந்துள்ளார். விராட் கோலி 765 ரோஹித் ஷர்மா 597 ரன்களும் அடித்துள்ளனர். அவர்கள் பேட்டிங்கில் சிறந்த பார்மில் இருந்து வருகின்றனர். 2022 உலகக்கோப்பைக்கு பின்னதாக ரோஹித் ஷர்மா t20 போட்டியில் விளையாடத நிலையில் ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வந்தார்.

இந்நிலையில் வரும் உலகக்கோப்பையில் அவர் தான் கேப்டன்சி செய்வார் என்றும் ரோஹித் ஷர்மா மற்றும் விறாட் கோலி இந்திய அணியில் இருக்க மாட்டார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா கட்டயாம் அணியில் உலகக்கோப்பை 2024 டி20 போட்டியில் விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியிருந்தார். இது குறித்து அவர் கூறுகையில்,
“தனிப்பட்ட முறையில், நான் விராட்டை ஆடுகளத்தில் பார்க்க விரும்புகிறேன், ஏனென்றால் நாங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேசும்போது, நிச்சயமாக அவர் சிறந்த ஃபார்மில் இல்லை. ஆனால் கடந்த ஐபிஎல் மற்றும் டி20 அவருக்கு மிகவும் அற்புதமான போட்டிகளில் ஒன்றாகும். மேலும், நீங்கள் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் விளையாடும் போது, சில அறியப்படாத ஆடுகளங்கள் உள்ளன.

மேலும் இங்கு உங்களுக்கு கோலி மற்றும் ரோஹித் ஷர்மா போன்ற அனுபவமிக்க வீரர்கள் தேவை, களத்திற்கு வெளியேயும், “இரு வீரர்களின் ஆட்டமும் அணி நிர்வாகம் மற்றும் அவர்களின் உடற்தகுதியைப் பொறுத்தது, ஆனால் அவர்கள் இருவரையும் களத்தில் பார்க்க விரும்புகிறேன், குறிப்பாக ரோஹித்தும் தனது வடிவத்தை மாற்றிக்கொண்டு ஒரு நாள் கிரிக்கெட்டில் நிறைய ரன்களை குவித்து வருகிறார். என்றும் அவர் கூறியிருந்தார்.





