உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர் பார்த்து காத்துகொண்டு இருந்த IPL 2024 திருவிழா முதல் தொடங்குகிறது. அதில் முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூரு அணியை எதிர்த்து சென்னை அணி மோதவுள்ளது. இதில் டெல்லி அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் மீண்டும் வந்துள்ளார். அவருக்கு இரண்டு வருடங்களுக்கு முன் அதாவது 30 டிசம்பர் 2022 ஆம் ஆண்டு மிகப்பெரிய கார் விபத்து அவருக்கு நடைபெற்றது. அதில் இருந்து அவர் உயிர் பிழைத்ததே அதிசயம் என்றும் சொல்லலாம்.

அதன் பின் அவர் எந்த ஒரு சர்வதேச மற்றும் ஐபிஎல் போன்ற தொடரிலும் அவர் விளையாட வில்லை. அவர் விளையாடாத 2023ஆம் ஆண்டு டேவிட் வார்னர் அணியின் கேப்டனாக செயல்பட்டு இருந்தார். தற்போது அவர் இந்திய அணியின் வருடந்திர ஒப்பந்தத்திலும் பி கிரேடில் இருந்து வருகிறார். ஐபிஎல் க்கு முன்னதாக நடைபெற்ற NCA டெஸ்ட்டில் அவர் தேர்ச்சி பெற்று ஐபிலில் களமிறங்க வுள்ளார். அது அவரது அணிக்கு பெரும் பலத்தை சேர்க்கும். ஆனால் அவரால் தொடர்ந்து விக்கெட் கீப்பிங் செய்ய முடியமா என்பது கேள்வி குறி தான்.
அவர் மீண்டும் அணியில் இணைந்தது குறித்து டெல்லி அணியின் வீரர் அக்சர் பட்டேல் சிலவற்றை கூறியுள்ளார். ரிஷப் பண்ட் குறித்து அவர் கூறுகையில், அவரை மீண்டும் அணியில் சேர்ப்பது மிகவும் நல்லது என்று அனைவரும் கூறியிருப்பார்கள் என்று நான் நம்புகிறேன், ஆனால் தனிப்பட்ட முறையில், நான் அவரை மிகவும் தவறவிட்டேன், கடந்த ஆண்டு களத்திலும் வெளியேயும் அவர் செய்யும் கேலிக்கூத்துகளை தவறவிட்டேன், ஆனால், இப்போது அவர் திரும்பி வந்துவிட்டதால், விளையாட்டைச் சுற்றியுள்ள தீவிரமான உரையாடல்களுடன் அனைத்து கேலிகளும் கேளிக்கைகளும் தொடங்கியுள்ளன என்று சமிபத்தில் அக்சர் பட்டேலும் கூறியிருந்தார்.

ரிஷப் பண்ட் உடற் தகுதி வேகமாக முன்னேறியது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி கூறுகையில், அவர் உடற்தகுதி மேம்பாடுகள் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நம்பிக்கையுடன், அவருக்கு இது ஒரு நல்ல பருவம், ஏனென்றால் அவர் உணர்ச்சிப்பூர்வமாக நிறைய கடந்துவிட்டார். நீங்கள் அந்த மாதிரியான காயத்தை சந்திக்கும்போது அது எளிதானது அல்ல. அவரை திரும்பிப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக மட்டும், ஆனால் டெல்லி ரஞ்சி அணிக்காகவும், இந்தியாவுக்காகவும், ஏனெனில் அவர் ஒரு சிறப்பு திறமை, சிறப்பான வீரர். யாரும் ரெடிமேட் கேப்டனாக வரமாட்டார்கள். நீங்கள் போகும்போது நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள், கேப்டன்சி என்பது உள்ளுணர்வால் என்று நினைக்கிறேன். நான் அவரைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி கூறினார்.





