உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. உலகின் முன்னனி அணிகள் பங்கேற்று இருக்கிறது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர். இந்தியா விளையாடும் போட்டிகளை காண எதிராணிகளை விட இந்தியர்களே மைதானத்தில் அதிகம் கூடுகின்றனர்.

இதனால் இந்திய அணி நல்ல உற்சாகத்துடன் இந்த தொடரில் ஆடி வருகிறது. இந்நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் சுமாராக செயல்பட்டு 42.5 ஓவரில் வெறும் 191 ரன்களுக்கு சுருண்டது. இதனால் இந்தியா அணி இதனை மிகவும் சுலபமாக வென்றது. இந்நிலையில் இந்த போட்டியில் பாபர் அசாம் மிகவும் மோசமான விளையாட்டை விளையாடினார். சொல்லப்போனால் 58 பந்துகளில் 50 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
மேலும் பாஸ்கிதான் அணியானது அந்த பந்துவீச்சிலும் அப்படி விளையாடவில்லை. இதனால் ரசிகர்கள் முதற்கொண்டு ரசிகர்களும் கடுமையான விமர்சனத்தை வைத்தனர். இந்த நிலையில் தான் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் மொயின் கான் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் “கேப்டனாக நோக்கத்தின் அடிப்படையில் பாபரின் பேட்டிங் அவரது இயல்பான ஆட்டமாக எனக்கு தெரியவில்லை. அவர் 58 பந்துகளை எடுத்தார். அவர் கிரீஸுக்கு வந்தபோது, முதல் விக்கெட் 41 ரன்களில் வீழ்ந்தபோது அவர் ஒரு செட்டில் ஆன ஆடுகளத்திலும் சூழ்நிலையிலும் இருந்தார். அவர் ரன்களை கொஞ்சம் தக்க வைத்துக் கொண்டு லேசாகத் அடித்து ஆடியிருக்க வேண்டும்.

நோக்கம் என்பது அணி முழுவதும் ஒன்றாக இருக்க வேண்டும், அதே நேரத்தில் அணியின் கேப்டன் ஷாட்டுகளை ஆடுவதற்கு பயப்படும் போது அணியின் வீரர்களின் அதனையே செய்வார்கள். அவர்கள் மிகுதியிலான அழுத்தில் இருந்தது போல தெரிந்தது. ஏனென்றால் அவர்கள் சரியான ஷாட்டுகளை விளையாடவில்லை. நீங்கள் பயப்படும் போது மொத்த அணியும் பயப்படும். ரன்களை அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எந்த பேட்ஸ்மேன்களையும் நான் பார்க்கவில்லை.
மேலும் சோயிப் மாலிக் இது குறித்து பேசுகையில் “பாபர் அசாம் தான் அணியை வழிநடத்துவார். அணி தோல்வியை தழுவியது மொத்தமும் அவரது பொறுப்பே. அணியுடன் அமர்ந்து முதல் திட்டம் தோல்வியடையும் பட்சத்தில் பிளான் “பி’ மற்றும் “சி” என திட்டங்களை வைத்திருக்க வேண்டும். நீங்கள் பெரிய அணியை எதிர்கொள்ளும் போது உங்களுடைய பிளான் “எ” தகர்க்கப்படும். அப்படியான சூல்நிலையில் உங்களிடம் மற்ற திட்டம் இல்லையென்றால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறினார் சோயிப் மாலிக்.



