அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியாது நேபாளத்துக்கு எதிராக 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இன்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது நடைபெற இருக்கிறது. இந்த ஆட்டத்தின் மிகவும் சுவாரசியமான அம்சங்களில் ஒன்று இந்தியாவின் நட்சத்திரங்கள் நிறைந்த பேட்டிங் வரிசைக்கும் பாகிஸ்தானின் வலிமையான வேகத் பந்துவீச்சு தாக்குதலுக்கும் இடையிலான போட்டியாகும். ரோஹித் ஷர்மா, விராட் கோலி, மறுபிரவேச வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா மற்றும் ஷுப்மான் கில் போன்றவர்கள், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரவூப் போன்ற உலக கிரிக்கெட்டின் சில கடுமையான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நேருக்கு நேர் மோதுவார்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய வீரர்களுக்கு குறிப்பிடத்தக்க சிரமங்களை ஏற்படுத்தினர். கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில், மெல்போர்னில் இந்தியாவை மீட்க விராட் கோலி பேட்டிங் மாஸ்டர் கிளாஸ் வழங்குவதற்கு முன்னர் பாகிஸ்தான் அணியானது 160 ரன்களை துரத்துவதில் இந்தியாவை 31/4 என்று குறைத்தது. மேலும் 2021ல் 20 ஓவர்களில் இந்தியாவை 151/7 என்று கட்டுப்படுத்திய பின்னர் பாஸ்கிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் தான் பாகிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்கும் இரு தொடக்க ஆட்டக்காரர்களும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் கம்பீர். இது குறித்து அவர் பேசுகையில் “இந்தியாவின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மான் கில் ஆகியயோர் பாகிஸ்தான் அணியின் ஷஹீன் அப்ரிடி மற்றும் நசீம் ஷாவுக்கு எதிராக உங்கள் அணுகுமுறை தெளிவாக இருக்க வேண்டும். ரன்களை அடிப்பதைப் பாருங்கள், அவுட் ஆகக்கூடாது என்று மட்டுமே ஆடாதீர்கள். நீங்கள் ரன்களை எடுக்கும்போது, நீங்கள் சிறந்த ரிதம் மற்றும் சிறந்த பேக்லிஃப்ட் மற்றும் ஃபுட்வொர்க்கைக் கொண்டிருப்பீர்கள்.

அடிக்கடி, ஷஹீன் மற்றும் நசீம் உலகக் கோப்பையில் இந்திய வீரர்களைத் தொந்தரவு தரும் பந்துவீச்சு பற்றி மக்கள் பேசுகிறார்கள். ஆனால் இப்போது அது எல்லாம் கடந்த காலம் ஆகிவிட்டது. ஒருநாள் போட்டிகள் என்பது ஒரு வித்தியாசமான வடிவம் ஆகும். பேட்டர்களுக்கு கிரீஸில் நிலையாக நின்று ரன்களை அடிக்க நேரம் இருக்கிறது. நீங்கள் அப்படி விளையாடி அரைசதம் அடிக்கும் பட்சத்தில் அவுட் ஆகாமல் இருக்க மட்டுமே நினைக்காமல் பெரிய ஷாட்டுகளுக்கு செல்வது முக்கியம்.
பொதுவான போட்டியின் போது நீங்கள் எவ்வளவு நேர்மறையாக இருக்கிறீர்களோ அந்த அவ்வளவு அதிகமாக அழுத்தத்தை நீங்கள் அந்த போட்டியின் போது உருவாக்குகிறீர்கள். எனவே அழுத்தத்தை பற்றி யோசிக்காமல் எளிமையாக இருங்கள், கடந்த காலம் கடந்த காலத்தில் உள்ளது. இது ஒரு புதிய நாள், புதிய போட்டி, வித்தியாசமான வடிவம். எனவே அதிரடியாக விளையாட முயற்சி செய்யுங்கள் என்று கூறினார் முன்னாள் இந்திய வீரர் கம்பீர்.



