வரும் அக்டோபர் 5ஆம் தேதி உலக கோப்பை 2023 போட்டியானது கோலாகலமாக தொடங்க இருக்கிறது. இந்த போட்டியானது இந்த வருடம் முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவதினால் கடந்த 2011 உலக கோப்பை போல வெற்றி பெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது. அதே சமயம் இந்தியாவின் பேட்டிங் ஆர்ட்டரிலும் சில திருத்தங்களை அதிரடியாக செய்து வருகிறது இந்திய அணியின் நிர்வாகம்.

அதனாலேயே மிகவும் தாமதமாகத்தான் ஆசியு கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. ஏனென்றால் இந்த தொடரில் கலந்து கொள்ளும் வீரர்கள் உலக கோப்பை போட்டியில் பங்குபெற அதிக வாய்ப்பு இருப்பதால் மிகவும் கவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த வீரர்கள் பட்டியலில் காயம் அடைந்து குணமாகிய வீரர்கள் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளனர்.
ஆனால் இந்த அணியின் தேர்வுக்கு முன்னாள் இந்திய அணியின் பயிச்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து கூறியிருந்தார். அதவாது தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள அணியில் பழைய வீரர்களே களமிறங்கிய நிலையில் இஷான் கிஷான் மற்றும் திலக் வர்மா அணியில் இருக்க வேண்டும் என்றும், மூன்று இடது கை வீரர்கள் அணியில் வேண்டும் என்றும் கூறிருந்தார். இந்த நிலையில் இந்த கருத்தை மரிமுகமாக விமர்சித்து பேசியுள்ளார் முன்னாள் இந்தியா அணியின் வீரர் கவுதம் கம்பிர்.

அவர் கூறுகையில் “ஒருவர் இடது கை ஆட்டக்காரரா, வலது கை ஆட்டக்காரரா என்பது முக்கியமல்ல. மூன்று இடது கை ஆட்டக்காரர்கள் வேண்டும் என்று நடக்கும் விவாதம் முற்றிலும் பயனற்ற சிந்தனை. நீங்கள் விளையாடுபவர்களின் தரத்தைப் பாருங்கள். இடது கை வலது கை பார்த்து எடுக்க கூடாது. உங்களிடம் இருக்கும் ஒரு நல்ல பேட்ஸ்மேன் வலது கை அல்லது இடது கை பேட்டராக் இருந்தாலும் எல்லா நிலையிலும் நன்றாக விளையாடுவார்.
எனவே ஐயர் நன்றாக விளையாடினாலோ அல்லது ராகுல் ரன் எடுத்தாலோ அவர்களைத் தேர்ந்தெடுங்கள். அவர்கள் இல்லையென்றால் இடது கை வீரர்கள் பார்மில் இல்லை என்றாலும் அவர்களை தேர்வு செய்ய வேண்டிய அவசியமில்லை கிடையாது. இந்த இடது கை வீரர் குறித்த விவாதத்தைத் தொடங்க வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன்.

உங்களிடம் அணியில் இடது கை வீர்ர் தேவைபடுகிறது என்றால், உங்களுக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் கூட இருக்கிறார். நீங்கள் எப்போதும் தரம் மற்றும் பார்மை பார்க்க வேண்டும், எத்தனை பேர் இறுகின்றனர் என்று பார்க்க கூடாது என்றார் கவுதம் கம்பீர். இந்நிலையில் ஏற்கனவே புதிய இந்திய அணியின் நிர்வாகம் குறித்து பலவிதமான விமர்சனங்கள் வந்த நிலையில் மீண்டும் முன்னாள் வீரர்கள் நிர்வாகத்தின் மீது விமர்சனங்கள் வைப்பது குறிப்பிடதக்கது.



