ஆஸ்திரேலிய அணிக்கு அறை இறுதி போட்டிக்கு தகுதி பெற இன்னும் எத்தனன போட்டிகள் விளையாட வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம். உலகம் முழுவதும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் காத்துக் கொண்டிருந்த 2023 காண ஒரு நாள் உலகக் கோப்பை போட்டி 5 ஆம் தேதி முன்பு தொடங்கியது. அதில் ஆஸ்திரேலியாஅணி ஐந்தாவது போட்டியில் இந்தியா அணியை எதிர் கொண்டது. அதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதன் பின் இன்று சவுத் ஆப்பிரிக்கா இன்னைக்கு எதிரான போட்டியில் வென்று தீர வேண்டும் என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி களம் இறங்கியது. அதில் டாஸ் என்ற ஆஸ்திரேலியா அணி முதலில் தேர்வு செய்தது. ஆனால் அது அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை. தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்க 50 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி ஏழு விக்கெட் களை இழந்து 311 ரன்களை குவித்தது. அணியின் அதிகபட்ச ஸ்கோராக டீகாக் 109 ரன்களை அடித்து இருந்தார்.
312 ரன்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பம் பெருத்த அடியாக இருந்தது.அனைத்து வீரர்களும் அவுட் ஆகி வெளியேற 40.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இது ஆஸ்திரேலிய அணியின் இரண்டவாது தொடர் தோல்வியாகும். இதிலிருந்தே தெரிகிறது கேப்டன் பாட் காமின்ஸ் திட்டம் எதுவும் சரியாக வரவில்லை என்றும்.

இந்த மாதிரியான சூழ்நிலைதான் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், வர்ணனையாளருமான கவுதம் கம்பீர் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ங்கை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் ” ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் போட்டியிட தகுதியற்றவர் என்று நான் நினைக்கிறேன்.
கேமரூன் கிரீன் பேட்டிங் துறையில் பங்களிக்க முடியும் என்பதால், அவருக்குப் பதிலாக கேமரூன் கிரீனை சேர்க்கலாம் என்று நான் நினைக்கிறன். ஒயிட் பால் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணியை ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்த வேண்டும். பாட் கம்மின்ஸ் இந்த ஒருநாள் போட்டிளில் இடம்பெறாமல் அவர் தொடர்ந்து சிவப்பு பந்து கிரிக்கெட் விளையாட வேண்டும். ஆடம் ஜம்பா மட்டுமே அணியில் சுழற்பந்து வீச்சாளர்.

ஆஸ்திரேலியா சரியான திட்டத்துடன் உலகக் கோப்பைக்கு வரவில்லை. மற்ற அணிகளைப் பாருங்கள், அவர்கள் அணியில் மேட்ச் வின்னிங் ஸ்பின்னர்கள் உள்ளனர். முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் அணியின் தேர்வு செயல்முறை குறித்து கருத்துகளை பார்க்க விரும்புகிறேன். அவர்கள் மற்ற நாடுகளைப் பற்றி பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.



