கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். ஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக் கொள்வார்கள் என்பதாலேயே இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் உலகப்புகழ் பெற்றதாக இருக்கிறது.

இந்நிலையில் உலக கோப்பை 2023 போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. மேலும் இதற்கு முன்னதாகவே இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது நடக்க இருக்கிறது.இதனால் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாகவே இந்தியா vs பாஸ்கிதான் போட்டியானது நடக்க இருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எந்த போட்டிக்கு அதிகரித்துள்ளது. மறுபுறம் கேஎல் ராகுல் காயத்தால் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து குணமடைந்து எவ்விதமான போட்டிகளிலும் விளையாடாமல் நேரடியாக ஆசிய கோப்பையில் களமிறங்குவது இந்திய அணியின் மிடில் ஆர்டரை பலவீனப்படுத்தியுள்ளது. அதனால் அடிக்கடி கேப்டன்களை மாற்றுவது சோதனைகளை செய்வது போன்றவற்றால் தங்களை தாங்களே அழித்துக் கொண்டிருக்கும் இந்தியாவை இந்த ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் நிச்சயம் தோற்கடிக்கும் என அந்நாட்டை சேர்ந்த நிறைய முன்னாள் வீரர்கள் சவால் விட்டு வருகிறார்கள்.

அதை விட தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹின் அப்ரிடி 2021 டி20 உலகக் கோப்பை போல இந்திய டாப் ஆர்டரில் இருக்கும் வலது கை பேட்ஸ்மேன்களான ரோகித், கில், விராட் கோலி ஆகியோரை தெறிக்க விட்டு பாகிஸ்தானை வெற்றி பெற வைப்பார் என வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்களும் கணித்து வருகிறார்கள். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் இந்தியாவின் முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து கூறியுள்ளார்.

அவர் பேசுகையில் “பாபர் அசாம் ஒரு நல்ல வீரர் அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இந்தியாவின் பந்துவீச்சாளர்கள் அவருக்கு உலகக் கோப்பையின் போது பந்து வீச வேண்டும். அதற்கு முன் அவர்கள் ஆசிய கோப்பையில் அவரை நோக்கி பந்து வீச வேண்டும். அவருக்கான திட்டங்களை இந்தியா வைத்திருக்கும், எங்களிடம் நல்ல பந்துவீச்சு தாக்குதல் உள்ளது. ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் போன்ற திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர்.
While @SGanguly99 knows that @Babarazam58 in his current element will be a challenging nut to crack, he's positive that #India has a fast-bowling attack strong enough to restrict him from doing what he does! 💥 pic.twitter.com/iGJp3aiGPh
— Star Sports (@StarSportsIndia) September 1, 2023
பாகிஸ்தான் அணியில் பாபரும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்க்ளுக்கு எதிராக ரன்களை எடுத்து நன்றாக பேட் செய்ய வேண்டும். ஏனென்றால் அவர்கள் ஒரு நல்ல வேகப்பந்து வீச்சு தாக்குதலை எதிர்கொள்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். மேலும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களும் பாபர் அசாமிற்கு எதிராக நன்றாகப் பந்துவீச வேண்டும் என்று கூறினார் முன்னாள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி.



