உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இடையேயான போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று அதாவது ஜூன் 9ஆம் தேதி இறுதிப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில், மூன்றாவது நாளில் திரும்பிய இந்திய அணி, மூன்றாவது நாள் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதாவது 177 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது.

இன்றைய நாள் இந்திய அணிக்கு ஆரம்பத்தில் சிறப்பாகவே அமைந்தது. இந்திய அணியில் இருந்து மூன்றாவது நாளில், அஜிங்க்யா ரஹானே சிறப்பாக பேட்டிங் செய்து 89 ரன்கள் எடுத்தார். அவருடன் இணைத்து அற்புதமாக விளையாடி வந்த ஷர்துல் தாக்கூர் அரை சதத்தை பூர்த்தி செய்தார். மற்றொரு பக்கம் அதிரடியாக விளையாடி வந்த ரஹானே இறுதிப் போட்டியில் இந்திய அணி அபாரமாக மீண்டு வந்துள்ளது.
ஆனால் ரஹானே கடந்த ஆண்டு பிப்ரவரியில் இருந்து அணியில் இருந்து விலகி இருந்தார். பின்னர் உள்ளூர் கிரிக்கெட் மற்றும் 2023 இந்தியன் பிரீமியர் லீக்கில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாடிய பெரும் கவனத்தை பெற்றார். மேலும் தற்போது நடந்துவரும் உலகக்கோப்பி டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியாவிற்கு தேவைப்படும் நேரத்தில் சிறப்பாக விளையாடியுள்ளார். இந்த இந்நிலையில் தான் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கங்குலி ரஹானேவை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

கங்குலி கூறியது :
அவர் கூறுகையில் “18 மாதங்களுக்குப் பிறகு ரஹானேவின் ஆட்டம் எவ்வளவு நன்றாக இருக்கிறது. ரஹானே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து 18 மாதங்கள் விலகி இருந்தார். பலர் ரஹானே டெஸ்ட் அணியில் இருந்து காரணமாக இருக்கலாம், ஒருவேளை அவராக கூட இருக்கலாம். அப்படி அணியில் இருந்து வெளியேறிய பிறகு இந்திய கிரிக்கெட்டில் ஒரு பேட்டராக திரும்பி வருவது என்பது சாதாரண காரியம் கிடையாது. இது பிரமாண்டமானது என்று நினைக்கிறேன்.
கடந்த காலங்களில் பல வீரர்கள் அணியில் இருந்து விலகி பின்னர் திரும்பி வந்து சிறப்பாக விளையாடினார்கள். ஆனால் ரஹானேவை போல இவ்வளவு நீண்ட காலத்திற்குப் பிறகு இல்லை என்ரூ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேற்று கூறினார் கங்குலி. மேலும் ரஹானேவை பற்றி பேசிய அவர் “ரஹானே மிகவும் சிறப்பானவர், மறுமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் அவர் கடுமையாகப் போராடினார்.

உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால், இந்த ஆடுகளத்தில் நீங்கள் பேட்டிங் செய்ய முடியும் என்று அவர் இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமுக்கு நிரூபித்துள்ளார். கண்டிப்பாக ரஹானேவை பாராட்டிய ஆகவேண்டும். சிறப்பாக பேட்டிங் செய்த அவருக்கு ஷர்துல் தாக்கூர் பக்கபலமாக இருந்தார். இந்தியாவுக்காக சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். இந்தியாவிற்கு இது ஒரு சவாலாகவும் அதே நேரத்தில் நல்ல போட்டியாகவும் இருக்கும் என்றார் கங்குலி.





