இந்திய இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் 3 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளது. அதில் 2 -1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. கடைசி டெஸ்ட் போட்டியானது சில நாட்கள் முன்பு ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது. அதில் இந்திய அணியின் சிறப்பான பேட்டிங் மற்றும் சிறப்பான பந்த்துவீச்சு சிறப்பாக இருந்தது. கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று இருந்தது.

அதில் இந்திய அணிக்கு முக்கிய தூணாக இருந்தது ஜெய்ஸ்வாலின் பேட்டிங்கும் ஒரு காரணம் தான். அது மட்டுமல்லாமல் அதற்க்கு முக்கிய காரணமாக இருந்தது சர்ப்ராஸ் கானின் இரண்டு அரை சதமும் தான். சர்ப்ராஸ் கான்னுக்கு இது தான் இந்திய அணிக்கு அறிமுகப்போட்டி. அவர் பல காலமாக இந்திய அணிக்கு விளையாட வேண்டும் என்று அவர் போராடி கொண்டு இருந்தார். அவருக்கு கிடைத்த அற்புதமான வாய்ப்பை அவர் பயன்படுத்திக்கொண்டு தனது திறமையை அவர் வெளிப்படுத்தினார்.

இந்த இரண்டு இளம் வீரர்கள் பற்றி கங்குலி கூறுகையில், ஜெய்ஸ்வால் ஒரு சிறந்த வீரர் மட்டுமல்ல, அவர் அனைத்து விளையாட்டு வடிவங்களிலும் விளையாடும் திறன் கொண்டவர். சர்ஃபராஸ் நன்றாகத் தொடங்கியுள்ளார். அவர் இப்போது வெளிநாடுகளில் ரன்களை அடிக்க வேண்டும். வளரும் கிரிக்கெட் வீரர்களுக்கு சர்ஃபராஸ் ஒரு சிறந்த உதாரணம், யார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் தொடர்ந்து ஸ்கோர் செய்கிறார்கள், அவர்கள் தங்கள் வாய்ப்புகளைப் பெறுவார்கள், ”என்று கங்குலி கூறினார்.

“பாஸ்பால் நன்றாக இருக்கிறது, ஆனால் இந்திய சூழ்நிலையில் இங்கிலாந்து வெற்றி பெறுவது கடினம். இந்தியா தொடரை இழந்தால் நான் ஆச்சரியப்படுவேன். விராட் [கோஹ்லி], கேஎல் [ராகுல்] இல்லாமல் இந்தியா விளையாடுகிறது என்பதை நினைவில் கொள்க. இது பலரைக் கொண்ட இளம் அணி. புதிய முகங்கள், இன்னும், இங்கிலாந்து போராடி வருகிறது” என்று கங்குலி விளக்கினார் அடுத்த டெஸ்ட் போட்டியானது 23ஆம் தேதி நடைபெற உள்ளது.





