இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வரும் செய்தி என்றால் அது இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர்கள் சம்பளம் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டது தான் பிசிசிஐ நேற்று மத்திய ஒப்பந்தம் 2023 மற்றும் 2024 காண பெயர்களை வெளியிட்டது. அதில் சில முக்கிய வீரர்களின் பெயர்களை மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நிக்கியது தான். அதில் குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் பெயர்கள் தான் மிகவும் பேசப்பட்டு வந்தாலும் அதற்கு அடுத்தபடியாக சாஹல் புஜாரா ஷிகர் தவான் உமேஷ் யாதவ் ஆகியோரின் பெயர்களும் அந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இஷான் கிஷான் தென் ஆப்பிரிக்கா எதிரான டெஸ்ட் தொடரின் போது மன சோர்வு காரணமாக அணியிலிருந்து விலகினார். ஆனால் அதன் பின்னர் அவர் ரஞ்சி டிராபியில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடாமல் ஐபிஎல் 2024 பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதற்கு பிசிசிஐ எப்போது ஒரு எச்சரிக்கை ஒன்றையும் அளித்து இருந்தது. ரஞ்சி ட்ரோபியில் விளையாட வேண்டும் என்றும் கூறியிருந்தது. இஷான் கிஷன் அதனை சற்றும் மதிக்காமல் அவ்வாறு தொடர் ஐபிஎல்காக பயிற்சி மேற்கொண்டு வந்திருந்தார்.

இவர்கள் நீக்கம் குறித்து கங்குலி சிலவற்றை கூறியுள்ளார். அவர் கூறுகையில், பிசிசிஐ இருவரையும் முதல் தர கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஷ்ரேயாஸ் ஐயர் ஏன் ரஞ்சி கோப்பையில் விளையாடவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இது ஒரு முதன்மையான போட்டி மற்றும் நீங்கள் விளையாட வேண்டும். எனவே, இது பிசிசிஐயின் முடிவு மற்றும் அவர்கள் சரியாக நினைத்ததைச் செய்திருக்கிறார்கள். ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் முதல்தர கிரிக்கெட்டை விளையாட வேண்டும்.
ஏனென்றால் அதுதான் இந்த நாட்டில் கிரிக்கெட்டின் அடிப்படை.நீங்கள் முதல் தர கிரிக்கெட் விளையாட வேண்டும். நீங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரராக இருந்தால், நீங்கள் பிரீமியர் போட்டியில் விளையாடுவீர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் மும்பை அணிக்காக ஸ்ரேயாஸ் ஐயர் அரையிறுதியில் விளையாடுகிறார். ஆம், அவர்கள் இளைஞர்கள், இஷான் என்னை ஆச்சரியப்படுத்தியுள்ளார். அவர் அனைத்து வடிவங்களிலும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

ஐபிஎல்லில் இவ்வளவு பெரிய ஒப்பந்தம். ஏன் அப்படி செய்தான் என்று தெரியவில்லை. குறிப்பாக நீங்கள் இஷான் கிஷானைப் போல் திறமைசாலியாக இருக்கும்போது விளையாட வேண்டும். நீங்கள் அனைத்து வடிவங்களிலும் இந்தியாவுக்காக விளையாடும்போது, கண்டிப்பாக விளையாட வேண்டும். அவர் வேண்டாம் என்ற முடிவு எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்றும் அவர் கூறியிருந்தார்.





