ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற்று வரும் இந்த ஆசிய கோப்பை தொடரானது இந்திய அணிக்கு முக்கிய தொடராக பார்க்கப்படும் வேளையில் இந்த தொடரில் விளையாடும் இந்த அணியே உலகக்கோப்பை தொடரின் பிளேயிங் லெவனாக இருக்கும் என்பதனால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நாள் மழை காரணமாக தடைபட்ட நிலையில் அடுத்த நாள் மீண்டும் அந்த போட்டியானது தொடர்ந்த்து. மேலும் இந்த நாளில் அற்புதமாக விளையாடிய விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் ஆட்டம் இழக்காமல் சதம் விளாசி அசத்தி இருந்தனர்.இதனால் இந்திய அணி இந்திய அணி 50 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் குவித்தது.
பின்னர் 357 ரன்கள் அடித்தால் வெற்றி இன்று இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 32 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 128 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பேட்டிங்கில் விராட் மற்றும் ராகுல் சிறப்பாக செயல்பட்ட நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு பேசிய முன்னாள் இந்திய அணியின் வீரரான கம்பீர் விராட் கோலி, ரோஹித் போன்றவர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் வெற்றிக்கு குலதீப் யாதவ் முக்கிய காரணம் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கொடுத்த பேட்டியில் “என்னை பொறுத்த வரை குல்தீப் யாதவ். அவரைத் தாண்டி நீங்கள் பார்க்க முடியாது. விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் சதமும் ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோர் நல்ல ரன்களும் அடித்தார்கள் என்பது எனக்கு தெரியும்.
ஆனால் ஸ்விங் மற்றும் வேகத்துக்கு சாதகமான இது போன்ற மைதானங்களில் 8 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் எடுப்பது கடினமாகும். அதிலும் குறிப்பாக சுழலை சிறப்பாக எதிர்கொள்ளக்கூடிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர் வீசிய பவுலிங் தான் வெற்றியை மாற்றியது

அது தான் அவர் எந்தளவுக்கு தரமான பவுலர் என்பதையும் காட்டுகிறது. குறிப்பாக அவர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு காற்றில் சுழல வைத்து பெரிய சவாலை கொடுத்தார். அது உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு மிகப்பெரிய நல்ல அம்சமாகும். ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நிகராக போட்டியின் எந்த சூழ்நிலையிலும் விக்கெட் எடுக்கும் திறமை அவரிடமும் இருக்கிறது என்று கூறியுள்ளார் கம்பீர்.



