உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 அக்டோபர் ஐந்தாம் தேதி கோலாகலமாக தொடங்கியது. அதில் இன்று உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்திய பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இந்திய பாகிஸ்தானங்களுக்கு எதிரான போட்டிகள் இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்த போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது.

இதன் மூலம் தொடர்ந்து 8 முறை ஒருநாள் உலக கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணியுடன் தோற்கவில்லை என்ற பாரம்பரியத்தை நிலைநாட்டியது. ஆனால் இந்த போட்டியின் தடுக்கத்தில் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஒரு கட்டத்தில் 155/2 என்ற நிலையில் இருந்தனர். இதனால் பெரிய ஸ்கொரை இந்தியா அணி எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் துரதிஷ்டவசமாக பாகிஸ்தான் அதன் பின் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 80 பந்துகளில் 36 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட்டானது. இதுபலருக்கும் அதிர்ச்சி தரக்கூடிய ஒன்றாக இருந்தது. இந்நிலையில் தான் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் மற்றும் ரிஸ்வான் ஆகிய இருவரில் ஒருவர் கூட அதிரடியாக விளையாடாமல் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியதே தோல்விக்கு காரணம் என்று கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.

அவர் கூறுகையில் “பாபர் அசாம் மெதுவாக விளையாடினார். பொதுவாக 2 பேட்ஸ்மேன்கள் ஒரே மாதிரி விளையாடி பார்ட்னர்ஷிப் அமைக்காமல் ஒருவர் பெரிய ஷாட்டுகளை விளையாடி ரிஸ்க் எடுத்து விளையாட வேண்டும். ஒருவேளை நீங்கள் உங்களுடைய அரை சதம் அல்லது ரன்களுக்காக விளையாடினால் உங்களுக்கு இது போன்ற முடிவுகள் தான் கிடைக்கும்.
குறிப்பாக பாபர் அசாம் பொதுவாக நிறைய ரன்களை தனக்காக அடிக்கிறார் என்று நான் நினைக்கிறன். ஆனால் பாகிஸ்தான் வரலாற்றில் எப்போதுமே ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடி நல்ல துவக்கத்தை பெறுவதையே ஐவரும் விரும்புவார்கள். அதை ஷாஹித் அப்ரிடி, இம்ரான் நசீர் ஆகிய பாகிஸ்தான் மிடில் ஆர்டரில் செய்தார்கள். ஆனால் தற்போதைய பாகிஸ்தான் அணியில் டாப் 3 இடங்களில் ஒருவர் கூட எதிரணியை அட்டாக் செய்யும் முயற்சிக்கவில்லை என்று கூறியுள்ளார் கம்பீர்.
மேலும் இந்தியாவிடம் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் அணி மீது பலரும் பலவிதமான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். குறிப்பாக போட்டியியை வெள்ளாவிட்டாலும் கடுமையாக எதிர்ப்பு கொடுத்திருக்கலாம் ஆனால் அதனை பாகிஸ்தான் செய்யவே இல்லை என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் அதிர்ப்த்தி தெரிவித்து வருகின்றனர்.



