ஐபிஎல் 2023 க்கான லீக் போட்டிகளில் 63 போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில் உள்ள எக்னா கிரிக்கெட் மைதானத்தில் மோதின. 20 வது ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 177 ரன்களை குவித்தது. ஸ்டானிஸ் மட்டுமே 47 பந்துகளில் 89 ரன்களை குவித்து அணிக்கு நல்ல ஸ்கோரை கொடுத்தார்.

178 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியின் தொடக்கம் சரியாக இருந்தாலும் இக்கட்டான நேரத்தில் விழுந்த விக்கெட் மற்றும் கடைசி ஓவரில் லக்னோ அணியின் மோஷின் கான் வீசிய ஓவரில் 5 ரன்கள் மட்டுமே சென்றதால் மும்பை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்த வெற்றிக்கு முக்கியமான காரணமாக கருதப்படுவது மோஷின் கான் வீசிய அந்த கடைசி ஓவரும், ஸ்டோனிஸ் எடுத்த அந்த 89 ரன்களும் தான்.
அப்படிப்பட்ட நிலையில் தான் மோசின் மற்றும் ஸ்டோனிஸ் உள்ளிட்டோரை பாராட்டி டெல்லி அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அந்த பதிவில் “தி டூ எம்.எஸ்” என்று பதிவிட்டு மோஷின் மற்றும் ஸ்டோனிஸ் புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில் தான் அந்த ட்விட்டர் பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக தோனி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
The two Ms – Marcus and Mohsin! Breathtaking performance #LSG pic.twitter.com/1WOQ7Uwz6h
— Gautam Gambhir (@GautamGambhir) May 16, 2023
அதாவது இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை அணியின் கேப்டனுமான மஹ்ரந்திர சிங் தோனியை அமைவரும் சுருக்கமாக எம்.எஸ் என்று தான் அழைப்பார்கள். இது உலகம் முழுவதும் இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் முதற்கொண்டு உள்ளூர் கிரிக்கட் வீரர்கள் வரையில் மிகவும் பிரபலம். அப்படிப்பட்ட நிலையில் தான் கம்பீர் பதிவிட்டுள்ள “தி டூ எம்.எஸ்” என்ற பதிவை மையமாக வைத்து இவருக்கு தோனியை சீண்டாமல் இருக்க முடியாதா என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

சொல்லப்போனால் தோனி vs கம்பீர் என்ற ஒரு விமர்சனம் பல காலமாக ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் தோனியை கம்பீர் வெறுப்பது போன்றோ அல்லது தோனி கமீரை வெறுப்பது போன்றோ எந்த ஒரு நிகழ்வு நடைபெற்றவில்லை. இப்படிப்பட்ட நிலையில் இந்த பதிவு தோனியை பாராட்டி கூட கம்பீர் கூறியிருக்கலாம் என்று பதிவிட்டு வருகின்றன ரசிகர்கள்.





