ஆசிய கோப்பை தொடரில் இந்த நிலையில் நேற்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் மழை வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் தடுமாறிய இந்திய அணி 48.5 ஓவரில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதை தொடர்ந்து 267 ரன்களை துரத்திய பாகிஸ்தானை சேசிங் செய்யவிடாமல் மழை வந்து மொத்தமாக தடுத்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. அதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தப்போட்டியில் முக்கியமான தருணம் என்று கூறினால் முன்னதாக ஷாஹீன் அப்ரிடி, ஹரிஷ் ரவூப் ஆகியோருக்கு எதிராக ரோகித் சர்மா போன்றவர்கள் தடுமாறினாலும் விராட் கோலி காப்பாற்றுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் ரோஹித் அவுட்டானதும் களமிறங்கிய விராட் கோலி இன்சைட் எட்ஜ் வாங்கி க்ளீன் போல்ட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.

இந்நிலையில் அதற்கு பிறகு பொறுமையாக விளையாடிய இஷான் கிஷான் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இணைந்து பலமான பாட்னர்ஷிப் அமைத்து ரன்களை விளாசி 266 என்ற ஒரு தாக்குப்பிடிக்க கூடிய ஸ்கோருக்கு கொண்டுவந்தனர். ஆனால் அதற்கு பிறகு மழை காரணமாக இரண்டவது இன்னிங்ஸ் நடக்காமல் போனது. .இப்படிபட்ட நிலையில் தான் இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் இந்த பொறுப்பான ஆட்டம் குறித்து பேசியுள்ளனர் முன்னாள் வீரர்கள்.
இந்நிலையில் சிறந்த பவுலிங்கை கொண்ட பாகிஸ்தானுக்கு எதிராக அசத்திய இஷானுக்கு முன்னதாக வாசிம் அக்ரம், ரவி சாஸ்திரி போன்றோர் பாராட்டுகளை தெரிவித்த நிலையில் இந்திய அணியில் முன்னாள் வீரரும் 1983 உலக கோப்பை நாயகனுமான சுனில் கவாஸ்கர் இஷான் கிஷான் உலக கோப்பை போட்டியில் விளையாட வேண்டும் என்று கருத்து கூறியுள்ளார்.

இந்த விஷயம் குறித்து அவர் பேசுகையில் “நேபாளுக்கு எதிராக ஸ்ரேயாஸ் ஐயர் என்ன செய்கிறார் என்பதை பார்க்க நான் காத்திருக்கிறேன். ஒருவேளை அந்த போட்டியில் அவருக்கு பேட்டிங் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். ஏனெனில் நேபாளுக்கு எதிராக நம்முடைய டாப் 3 பேட்ஸ்மேன்களே 40 ஓவர்கள் வரை விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது”
“இறுதியில் அந்தப் போட்டியில் ஸ்ரேயாஸ் பெரிய அளவில் ரன்கள் எடுக்காத பட்சத்தில் நான் 4, 5 ஆகிய இடங்களில் கேஎல் ராகுல், இஷான் கிசான் ஆகியோரை தேர்ந்தெடுப்பேன். ஏனெனில் நீங்கள் முக்கியமான போட்டியில் 80 ரன்கள் அடித்த ஒருவரை நீக்குவது நியாயமானதாக இருக்காது. மேலும் இஷான் கிசான் இடது கை பேட்ஸ்மேனாக இருப்பதால் இந்திய பேட்டிங் வரிசையில் வித்தியாசத்தை ஏற்படுத்துபவராக இருப்பார்” என்று கூறினார்.




