ஐபிஎல் 2023 தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டுகளில் இல்லாதவாறு அனைத்து அணிகளும் தங்களுடைய மைதானத்தில் விளையாடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் இதுவரையில் மொத்தம் 6 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்த சூழ்நிலையில் பல அணிகளில் சில முக்கியமான வெளிநாட்டு வீரர்கள் இன்னமும் அணியில் இடம் பெறாமல் இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் ஒருவரை ஒரு அணியை கூற வேண்டும் என்றால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை கூறலாம். இந்த அணியில் இதுவரை சில வீரர்கள் இடம் பெறாமல் இருந்து வருகின்றனர். அவர்களில் தென்னாப்பிரிக்காவின் சில வீரர்களும் இருக்கின்றனர். ஏனெற்றால் தற்போது தென்னாப்பிரிக்க வீரர்கள் நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருவதால் ஐபிஎல் தொடக்க ஆட்டங்களில் விளையாட முடியவில்லை.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் போட்டியில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசென் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன் மற்றும் அவர்களின் கேப்டன் எய்டன் மார்க்ரம் ஆகியோரைர் முதல் போட்டியிலேயே இல்லை. இதனால் பெரும் இழப்பு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஏற்பட்டது. ஆனால் ஏப்ரல் 2 ஆம் தேதி நெதர்லாந்துக்கு எதிரான தொடர் முடிவடைந்த நிலையில், இந்த மூன்று வீரர்களும் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைந்துள்ளனர்.
Adding f̶u̶e̶l̶ fire to the Orange fire 🤩🔥
— SunRisers Hyderabad (@SunRisers) April 3, 2023
Special delivery coming to Hyderabad from 🇿🇦 🧡@AidzMarkram | #OrangeFireIdhi #OrangeArmy #IPL2023 pic.twitter.com/9hkZAsvvGq
ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியின் இரண்டாவது ஆட்டம் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியுடன் ஏப்ரல் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் போட்டியிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெரும் தோல்வியை தழுவியது. முதலில் பந்து வீசிய ஹைதராபாத் அணி அதிக ரன்களை லக்னோ அணிக்கு விட்டு கொடுத்து.
And we all go, ProteYAAAAAS! 🤩 @AidzMarkram | #OrangeFireIdhi #OrangeArmy #IPL2023 pic.twitter.com/RGZjtM7DDP
— SunRisers Hyderabad (@SunRisers) April 4, 2023
சிறப்பான ஆட்டத்தை ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 203 ரன்கள் எடுத்து. பின்னர் களமிறங்கிய SRH தொடக்கத்திலேயே சுதப்பியது இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விகெட்டுகள் இழப்பிற்கு வெறும் 131 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியுள்ளது. இந்த ஹைதராபாத் கேப்டன் எய்டன் மார்க்ரமுக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் தலைமை தாங்கினார். இந்தப் போட்டியில், புவனேஷ்வர் குமார் கேப்டன் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடதக்கது.





