தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் இடத்தில் இருந்து வருகிறது. தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய குஜராத் அணி கடந்த வருட ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் குஜராத் அணியின் தற்போதும் சிறப்பாக விளையாடி வரும் நிலையில் குஜராத் டைட்டன்ஸ் ஆல்ரவுண்டர் ராகுல் டெவாட்டியா சமீபத்திய நேர்காணலில் சில சுவாரஸ்யமான தகவலையும் இதுவரை ஐபிஎல்லில் தனது பயணத்தைப் பற்றி பேசினார்.

2020 ஆம் ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸுக்கு இடையிலான போட்டியின் போது சிறப்பாக ஆடிய ராகுல் டெவாட்டியா அந்த போட்டியில் அவர் விரைவான 31-பால் 53 ஐ அடித்தார். இருப்பினும் இந்திய அணியில் இன்னமும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ராகுல் டெவாட்டியா பேசுகையில் “நான் இந்திய அணியில் இடம்பெறுவது தேர்வாளர்கள் கையில் இருக்கிறது. சாதாரண ஒரு கிராமத்தில் இருந்து வந்த ஒரு சிறுவன், வீதிகளில் டவுசர் சட்டையுடன் விளையாடி கொண்டிருந்து தற்போது ஐபிஎல் போட்டியில் ஒரு பினிஷராக மாறியிருக்கிறேன். நான் இந்திய அணியில் சேரும் தூரத்திற்கு வந்துவிட்டேன் என்று நம்புகிறேன்.

இது என்னுடைய கனவு, சிறுவயதில் இருந்து நான் தொலைக்காட்சியை கிரிக்கெட் விளையாடுவதை பாரித்திருக்கிறேன். நான் டிவியில் வருவதை போல அவர்கள் விளையாடும் மைதானத்தில் விளையாட வேண்டும், அவர்கள் அணியும் இந்திய ஜெர்சியை போல நானும் அணிய வேண்டும் என்பது என்னுடைய கனவு. தற்போது என்னுடைய ஆசையை தொடும் அளவிற்கு வந்து விட்டேன். ஏன் என்னுடைய கனவை விட வேண்டும் என்றார்.

மேலும் பேசிய அவர் கூறுகையில் “நூறு சதவீதம் உங்களை நீங்கள் மேம்படுத்தவில்லை என்றால், அது 0.1% ஆக இருந்தாலும், இந்த விளையாட்டை விளையாடுவதன் நன்மை என்ன? பயிற்சி செய்வது மனஉறுதியை தரவேண்டும். நான் இப்போது ஒரு சிறந்த இடத்தில் இருக்கிறேன் என்று கூறினார் டெவாட்டியா.





