அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் இந்த நிலையில் நேற்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டியானது நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் மழை வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் தடுமாறிய இந்திய அணி 48.5 ஓவரில் 266 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதை தொடர்ந்து 267 ரன்களை துரத்திய பாகிஸ்தானை சேசிங் செய்யவிடாமல் மழை வந்து மொத்தமாக தடுத்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. அதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தப்போட்டியில் அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் சில ரன்களில் ஆட்டமிழந்தார். சொல்லப்போனால் இதற்கு முன்னாள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய 3 வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்து சாதனைகளை படைத்த அவர் ஐபிஎல் 2023 தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்று அசத்தினார். ஆனால் அதன் பின் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் சொதப்பிய அவர் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திலும் சுமாராக செயல்பட்டார்.

இந்நிலையில் நல்ல ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் டெக்னிக்கில் எந்த தவறுமில்லை என்று என்று தெரிவிக்கும் ஹர்பஜன் சிங் சமீப காலங்களில் அதிகப்படியான போட்டிகளில் விளையாடிய சோர்வாலையே தடுமாறுவதாக ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “அனேகமாக இது அதிகப்படியான கிரிக்கெட்டால் வந்துள்ளது என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் சமீப காலங்களில் தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் விளையாடி வருகிறார்”
“குறிப்பாக ஐபிஎல் தொடரில் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டார். இருப்பினும் மிகவும் அழுத்தமான ஐபிஎல் தொடருக்குப்பின் ஒவ்வொரு வீரருக்குமே ஓய்வு அவசியமாகும். அத்துடன் ஒவ்வொரு 2 – 3 நாட்களுக்கு ஒரு முறை நீங்கள் அதிக தூரம் பயணிக்க வேண்டியுள்ளதால் சிறிய ஓய்வு தேவையாகும். இருப்பினும் நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் ஐபிஎல் போலவே கம்பேக் கொடுத்து ரன்கள் அடிப்பதை விரைவில் பார்க்க முடியும்”
“ஏனெனில் அவருடைய டெக்னிக்கில் எந்த தவறுமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். அனேகமாக இது தன்னம்பிக்கையின் சற்று பின்னடைவு ஏற்பட்டதால் வந்திருக்கலாம். இருப்பினும் தமக்கு சற்று நேரம் கொடுத்து விளையாடினால் அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்று நான் நம்புகிறேன்” என கூறினார். இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின் நடைபெற்ற அயர்லாந்து தொடரில் பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக கில் ஓய்வெடுத்தது குறிப்பிடத்தக்கது.




