உலக புகப்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது வெற்றிகரமாக நடுப்பகுதியை நெருங்கிய நிலையில் ஐபிஎல் 2024 புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணியும் 2 வது இடத்தில் இருக்கும் கொல்கத்தா அணியும் மோதியது. இதில் ராஜஸ்தான் அணி தோல்வியடைவது போல சென்று திரிலிங் வெற்றியை பெற்றது. இதற்கு முக்கியமான காரணமாக இருந்தவர் ஜோஸ் பட்லர். அவர் தன்னுடைய அதிரடியான விளையாடினால் சதம் அடித்து இந்த வெற்றிக்கு உதவியிருந்தார்.

இந்நிலையில் ஜோஸ் பட்லர் குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் கூறுகையில் : அவர் ஒரு ஸ்பெஷல் பிளேயர். அவர் வேறு லெவல் வீரர். ஜோஸ் பட்லர் இதை முதன்முறையாக செய்யவில்லை. அவர் இதை பல முறை செய்து வருவதையும் நாம் பார்க்கலாம். அவர் ஒரு அபாரமான வீரர் என்பதால் நாங்கள் அவரைப் பற்றி அதிகம் பேசுவதில்லை, ஏனெனில் அவர் இந்திய வீரர் அல்ல.
விராட் கோலி இந்த சதத்தை அடித்திருந்தால், எம்எஸ் தோனியின் நான்கு மூன்று சிக்ஸர்களைப் பற்றி பேசுவது போல, இரண்டு மாதங்கள் அவரைப் புகழ்ந்து பாடியிருப்போம். எங்கள் வீரர்களைக் கொண்டாடுவது போல் அவரைக் கொண்டாட வேண்டும், ஏனெனில் அவரும் விளையாட்டின் ஜாம்பவான்களில் ஒருவர்.

வர் அமைதியானகவும் பொறுப்பாகவும் விளையாடுகிறார். அவர் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிக்ஸர், பவுண்டரிகள் அடித்து, ஒரு ரன், இரண்டு ரன் என தனக்கு கிடைத்தவற்றையெல்லாம் கைப்பற்றினார். மற்ற வீரர்கள் வெளியேறும்போது நிலையாக நின்று விளையாடிய பட்லரின் இன்னிங்ஸிலிருந்து நிறைய இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும் இந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பொறுமையாக விளையாடியிருந்தார் ரியான் பராக் குறித்தும் ஹர்பஜன் சிங் பேசியிருந்தார். அவர் கூறியதாவது : ரியான் பராக் ஒரு அற்புதமான இளம் வீரர். அவர் 34 ரன்கள் எடுத்தார். ஆனால் அங்கே நிதானமாகவும் கவனமாகவும் தான் விளையாடி பொடியைவெள்ள வேண்டும் என்றார் ஹர்பஜன் சிங்.
எந்தப் பந்து வீச்சாளருக்கு எதிராக எந்த ஷாட்டை ஆட வேண்டும் என்ற தெளிவான மனநிலை உங்களுக்கு உள்ளது. ஜோஸ் பட்லர் இதைச் செய்வது இது முதல் முறையல்ல. அவர் இதைப் பலமுறை செய்துள்ளார், இன்னும் எதிர்காலத்திலும் நிறைய நேரம் அவர் இதைச் செய்வதைப் பார்ப்போம் என்று நான் நம்புகிறேன். அவர் விளையாட்டின் ஜாம்பவான்களில் ஒருவர் என்றார் ஹர்பஜன்.





