உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய 14வது போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் பலபரீட்சை செய்தது. மும்பை அணி இதற்கு முன்பு நடந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவி இந்த முக்கியமான போட்டியில் களமிறங்கியது. இது மும்பை அணியின் 250 ஆவது போட்டியாகும்.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. மும்பை 20 ஒவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை மட்டுமே அளிக்க முடிந்தது. அதற்கு முக்கிய காரணம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சிறந்த பந்துவீச்சாளரான போல்ட் தான்.அவர் 4 ஒவர்களை வீசி 3 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி இருந்தார்.
ரோகித் ஷர்மா நமன்திர் மற்றும் ப்ராவிஸ் ஆகியோர்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்தார். அந்த மூன்று வீரர்களும் டக் அவுட்டாகி வெளியேறின. எனது அதன் பின்பு மிடில் ஆர்டரில் திணறிவது இருப்பினும் அவர்களால் 20 ஒவர்கள் முடிவு 125 கரங்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அதன் பின் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15.3 ஓவர்களிலே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.

இதில் அதிகபட்சமாக ரியான் பராக் 39 பந்துகளில் 54 ரன்களையும் அஷ்வின் 16 ரன்களையும் பட்லர் 13 ரன்களையும் அவர் அடித்து இருந்தார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி தனது ஹோம் கிரவுண்டில் 250 வது போட்டியில் தோல்வியை தழுவியது. மேலும் ஏற்கனவே சில போட்டிகளில் தோல்வியை தழுவிய மும்பை அணிக்கு இது பலத்த அடியாக இருந்தது என்றே சொல்லலாம். இந்நிலையில் போட்டிக்கு பிறகு பேசிய மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியது பின்வருமாறு.

இது ஒரு கடினமான இரவாக இருந்தது. நாங்கள் போட்டியயை தொடங்க விரும்பிய வழியில் தொடங்கவில்லை. நான் எதிரணியின் திட்டங்களுக்கு பதிலடி கொடுக்கு விரும்பினேன்.எங்களுடைய அணி 150-160 ரன்களுக்குள் பெறுவதற்கு தகுதியான நிலையில் இருந்தது. ஆனால் எனது விக்கெட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீண்டும் விளையாட்டிற்கு வர அனுமதித்தது. ஆனால் அப்போது நான் இன்னும் நிறைய அணிக்காக செய்ய வேண்டியிருந்தது.

பரவாயில்லை இதுபோன்ற ஒரு மேற்பரப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் நீங்கள் அதை எப்போதும் ஒரு இடியாக வைத்திருக்க முடியாது. பந்து வீச்சாளர்கள் சொல்வது சில சமயங்களில் நன்றாக இருக்கும். இது சரியான விஷயங்களைச் செய்வது பற்றியது. சரியான முடிவுகள் சில நேரங்களில் நடக்கும். வேறு சில நேரங்களில் அது நடக்காது. ஒரு குழுவாக எங்களால் இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் நாங்கள் இன்னும் கொஞ்சம் ஒழுக்கமாக தைரியமாக விளையாட வேண்டும் என்றார் ஹர்திக் பாண்டியா.





