வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி நேற்று நடந்த நிலையில் இதில் மோசமான தோல்வியை தழுவியது இந்தியா. சுப்மன் கில் இஷான் கிஷான் தொடக்கத்திலேயே சொதப்ப பின்னர் வந்த சஞ்சு சாம்சனும் அதிரடி காட்டாமல் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த திலக் வர்மா கொஞ்சம் போட்டியை கட்டுக்குள் கொண்டுவந்தாலும் அவரும் பின்னர் ஆட்டமிழந்தார்.

மேலும் பல போட்டிகளில் தோனியை போல நின்று வெற்றியை தேடிக்கொடுக்கும் ஹர்திக் பாண்டியா துரதிஷ்ட வசமாக 19 ரன்களில் ஆட்டமிழந்தார். இருந்த போதிலும் இந்திய அணிக்கு வெற்றிபெற இந்த போட்டியில் வாய்ப்பு இருந்தது, குறிப்பாக 2 ஓவரில் 21 ரன்கள் என்பது T20 போட்டியில் எடுக்க கூடிய இலக்குதான் ஆனால் அப்போது திடீரென ஆக்சர் படேல் ஆட்டமிழந்ததால் இந்தியா தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு பேசிய ஹாதிக் பாண்டியா தோல்விக்கான காரணம் குறித்தும் அடுத்த போட்டியில் இந்தியா என்ன செய்ய போகிறது என்பது குறித்தும் பேசினார்.
ஹர்திக் பாண்டியா கூறியது
அவர் கூறுகையில் “இந்த துரத்தலை சரியாகத்தான் நாங்கள் ஆரம்பித்தோம். சில தவறுகளையும் செய்தோம் அது எங்களுடைய இந்த தோல்விக்கு காரணமாக அமைந்தது.இளம் வீரர்களை கொண்ட அணி என்பதால் சில தவறுகளும் நடந்தது. நாங்கள் அனைவரும் ஒன்றாக வளர்கிறோம். இந்த போட்டியில் பெரும்பாலான பகுதி எங்களுடைய கையில் தான் இருந்தது. அது எங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கிறது.

இன்னும் எங்களுக்கு 4 நல்ல டி20 போட்டிகள் வர இருக்கிறது. எவ்வளவு ரன்களை துரத்த வேண்டும் என்றாலும் விக்கெட்டுகளை இழந்தால் அந்த போட்டி கடினமாகி விடுகிறது. அந்த தான் இங்கே நடந்துள்ளது. இந்த போட்டியில் ஏற்பட்ட சில தருணங்கள் இந்த போட்டியையே எழுக்களுடைய வெற்றியில் இருந்து மாற்றி விட்டது. சாஹல், குல்தீப், அக்சர் போன்றவர்களை களமிறக்க காரணமே இந்த ஆடுகளம் தான். இங்கு ஸ்பின்னர்க்ளுக்கு ஒன்றாக வாய்ப்பு வழங்கலாம் என்று நினைத்து இதனை செய்தோம்.
அக்சர் பேட்டிங்கிலும் சிறப்பாக விளையாடுவர் என்ற காரணத்தினால் இது நல்ல காம்பினேஷனாக இருக்கும் என்று நினைத்தோம். முகேஷ் குமார் சிறப்பாக விளையாடி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இதன் மூலம் அவர் அறிமுகமாக மூன்ற விதமான போட்டிகளிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டார். ஒரு நல்ல மனிதர் அறிவாளியும் கூட. அவர் தன்னுடைய அணிக்காக தன்னால் என்ன முடியுமோ சாதனை சரியாக செய்கிறார். இவர் சில ஓவர்களை தொடர்ந்து வீசியது சிறப்பாக இருந்த்து.

திலக் வர்மாவின் ஆட்டத்தை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சர்வதேச போட்டியை தொடங்க மோசமான போட்டியெல்லாம் இது கிடையாது. 2 சிக்ஸர்கள் மூலம் சிறப்பாகவே தன்னுடைய ஆரம்பத்தை தொடங்கினார். அவருக்கு பயமும் இல்லை நம்பிக்கையும் அதிக அளவு இருக்கிறது. அவர் இப்படி விளையாடுவது இந்தியா அணிக்கு சரியான உதவியாக இருக்கும் என்றார் ஹர்திக் பாண்டியா.




