மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியாது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது.இடஙக சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் அற்புதமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் இரண்டாவ்து போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியானது பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து தொடக்க வீரார்களாக களமிறங்கிய சுப்மன் கில் மற்றும் கிஷான் பொறுமையாகவே அட ஆரம்பித்தனர். ஆனால் சுப்மன் 7(9) ரன்களை மட்டுமே எடுத்து மீண்டும் சொதப்பினார். அதற்கு பிறகு வந்த சூரியகுமார் யாதவ் 1(3) ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பியதினால் இந்திய அணிக்கு அழுத்தமானது கூடியது.

இதனையடுத்து இஷான் கிஷனுடன் கைகோர்த்து கொண்ட இந்திய திலக் வர்மா பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டாலும் இஷான் கிஷான் 27(23) ரன்களில் ஆட்டமிழந்தார், மேலும் பின்னர் வந்த சஞ்சு சாம்சன் 7(7) ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் தனி ஆளாக திலக் வர்மா மட்டுமே அசத்தி கொண்டிருந்தார். அதோடு 50(39) பந்துகளில் அரை சதத்தையும் விளாசினார்.
இந்திய அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது. தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை இழந்தது, அதற்கு பிறகு 4வது ஓவரில் ஆதிரடி வீரர் கையில் மேயர்ஸ் ஆட்டமிழந்தததால இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு அற்புதம் நிகழ்த்திய பூரன் வேஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றி பெற செய்தார்.

மறுபுறம் இந்தியாவின் இந்த தோல்விக்கு பலரும் கேப்டன் ஹாதிக் பாண்டியாவின் கேப்டன்சி சரியில்லை என்று விமர்சித்தனர். இப்படிபட்ட நிலையில் தான் போட்டி முடிந்து பேசிய ஹர்திக் பாண்டியா கூறுகையில் ” உண்மையிலேயே சொல்ல வேண்டும் என்றால் இந்த போட்டியில் எங்களுடைய அணி சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். 160 முதல் 170 ரன்கள் வரை அடித்திருந்தால் நிச்சயம் போதுமான இலக்காக இருந்திருக்கும். நிக்கோலஸ் பூரான் மிகச் சிறப்பாக விளையாடினார். அவருக்கு எதிரா ஸ்பின்னர்களை பயன்படுத்து கொஞ்சம் கடினமாக இருந்தது.

எங்களது அணியின் பேட்ஸ்மன் சரியாக இணைந்தது விளையாட வேண்டியது அவசியம். ஸ்கோர் நன்றாக இருந்தால் பவுலர்கள் போட்டியை வெற்றி பெற்று கொடுப்பார்கள். ஆனால் இந்த போட்டியில் எங்களது அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படவில்லை. இடது கை பேட்ஸ்மேன் வருவது எங்களுக்கு அணியில் நல்ல சமநிலையை கொண்டு வர வேண்டும். இது ஒரு சர்வதேச போட்டி போல தெரியவில்லை என்றார் ஹர்திக் பாண்டியா.




