ஐபிஎல் 2023ல் இன்று மிகவும் அற்புதமான ஆட்டம் நடைபெறுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நல்ல தொடக்கத்தை பெற்றது. ரோகித் சர்மாவும், இஷான் கிஷானும் போன்றவர்கள் வேகமாக ஆட்டமிழந்த நிலையில் சூரியகுமார் யாதவ் அவர் 49 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 11 பவுண்டரிகள் உதவியுடன் 103 ரன்கள் எடுத்தார்.

சூர்யாவைத் தவிர, விஷ்ணு வினோத் அதிரடியாக 30 ரன்கள் எடுத்தார். முதல் இன்னிங்கில் ரஷித் கான் 4 விக்கெட்டுகளையும், குஜராத்தைச் சேர்ந்த மோஹித் 1 விக்கெட்டையும் கைப்பற்றினார். இறுதியில் மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு தொடக்கமே மோசமாக இருந்தது.
ஷுப்மான் கில் 6 ரன்களிலும், சாஹா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தாலும் டேவிட் மில்லர் பொறுமையாக ஆடி 41 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். ஆனால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் அதிரடியாக ஆட ஆரம்பித்தார் ரஷித் கான். அதிரடியாக ஆடி சிக்ஸர்களை நாலாபுறமும் பறக்கவிட்ட ரஷீத் கான் 21 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 32 பந்துகளில் 10 சிக்ஸர்கள் 3 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் எடுத்தார்.

ஹர்திக் பாண்டியா :
இந்நிலையில் இந்த போட்டிக்கு பிற்காடு பேசிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “எங்கள் அணி சார்பாக ரஷீத் கான் மட்டுமே மிகச் சிறப்பாக ஆடினார். அவர் பேட்டிங் செய்த விதமும், பவுலிங் செய்த விதமும் மிகவும் அற்புதமாக இருந்தது. அவரை தவிர்த்து நாங்கள் எங்களுடைய சிறப்பான செயல்பாட்டை இன்று வெளிப்படுத்த தவறிவிட்டோம். ஒரு அணியாக நாங்கள் இந்த போட்டியில் இல்லை என்று கூற வேண்டும். ஏனெனில் எங்களுடைய திட்டங்களில் தெளிவு இல்லை.

இந்த போட்டியில் எங்களுடைய திட்டங்கள் தவறியதாலே தோல்வி கிடைத்தது. ஆனால் இதிலிருந்து நிச்சயம் நாங்கள் மீண்டு வருவோம் என்றார். மேலும் சூரிய குமார் யாதவ் சிறப்பாக செயல்படார் என்றும் அவர் டி20 போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேன் என்று பாராட்டினார். மேலும் தன்னுடய திட்டங்கள் சரியாக செல்லவில்லை என்றும், அதுவே நாங்கள் இந்த போட்டியில் தோல்வியடைய காரணம் என்றும் கூறினார்.





