உலக ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த ஒருநாள் உலக கோப்பை 2023 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் ஏற்கனவே பல அணிகள் 3 போட்டிகளை விளையாடிய நிலையில் அவர்களின் பலம் எனது பலவீனம் எனது என்பது குறித்து நன்றாக தெரிந்து வைத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த உலக கோப்பையில் தொடர்ந்து மூன்று முறை வென்ற இந்திய அணியானது இன்று பங்களாதேஷ் அணியை எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணியானது பேட்டிங் செய்ய தேர்வு செய்தது. ஆனால் இந்த போட்டியில் கேப்டன் சகீப் அல் ஹாசன் இல்லை. மேலும் கடந்த சில போட்டிளில் பங்களாதேஷ் அணியானது கொஞ்சம் தடுமாறி வருகிறது. சொல்லப்போனால். முதல் போட்டியை தவிர பங்களாதேஷ் அணியானது 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் இந்த போட்டியை வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் பங்களாதேஷ் அணி இருக்கிறது.
இந்நிலையில் முதல் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி தொடக்கத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், பின்னர் அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். இந்நிலையில் 9வது ஓவரின் போது ஹர்திக் பாண்டியா பந்துவீச்சினார். அதன் போது 3வது பந்தில் பங்களாதேஷ் வீரர் நேராக அடிக்க அதனை தடுக்க முயற்சி செய்த பாண்டியா கால் தடுமாறியது. இதனால் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது போல தெரிந்தது.

இதனால் ஹர்திக் பாண்டியா சிகிச்சை எடுப்பதற்கு பெவிலியன் திரும்பிய நிலையில் அவருக்கு பதிலாக விராட் கோலி மீதம் இருக்கும் மூன்று பந்துகளை வீசினார். மேலும் 6 வருடங்களுக்கு விராட் கோலி பந்துவீசியது குறிப்பிட தக்கது. ஆனால் இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஹர்திக் பாண்டியாவின் காயம் எந்த அளவிற்கு இருக்கும் என்பது தெரியவில்லை. அவர் கொஞ்சம் தயங்கி தான் நடந்தது சென்றார்.

ஒருவேளை அவருக்கு காயம் பலமாக இருக்குமாயின் அது இந்தியாவிற்கு பேசிய அடி. ஏனென்றால் ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு முக்கியமான வீரர் என்பதில் சந்தேகமே கிடையாது. அவர் இந்திய அணியின் துணை கேப்டன் மட்டுமல்லாமல், அவர் பேட்டிங் மற்றும் பந்துவீசும் திறமை கொண்டவர். மேலும் பில்டிங்கிலும் சிறப்பாக செயல்படுவார். ஆனால் அவருக்கு ஏற்பட்ட காயம் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Virat Kohli – THE KING .. Bowling for Team India against Bangladesh 😂🙌❤️#INDvsBAN #indiavsbangladesh #ICCCricketWorldCup #ICCCricketWorldCup23 pic.twitter.com/50yzrPZFeN
— Kohlified (@kohlified23) October 19, 2023
இந்நிலையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் போட்டியை பொறுத்தவரையில் குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டியும் வீழ்த்திய நிலையில் பங்களாதேஷ் 23 ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்து 118 ரன்களை எடுத்துள்ளது.



