
ஐபிஎல் 2024 தொடருக்கு முன்பாக குஜராத் மற்றும் மும்பை அணிகள் குறித்து பல சர்ச்சைகள் எழுந்து வந்துள்ளது. குஜராத் அணியின் கேப்டனாக இருந்து வந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி 15 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஐபிஎல்2022-ல் இருந்து குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்து வருகிறார். இவர் கேப்டனாக பதவி வகித்த முதல் போட்டியிலேயே கோப்பையை குஜராத் அணிக்கு பெற்று தந்தார்.

ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி வரை சென்று சென்னை சென்னை அணியிடம் தோல்வியை தழுவி இரண்டாவது இடத்தை பிடித்தார். ஐபிஎல் வரலாற்றில் கோப்பை வென்ற ஒரு அணியின் கேப்டனை மற்ற அணிக்கு வர வைப்பதற்காக பேரம் பேசி இருப்பது இதுதான் முதல் முறையாகும். குஜராத் அணி 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் தான் அந்த அணி அறிமுகமானது அப்போது அந்த அணியின் ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணியின் கேப்டனாக நியமித்தது. இதற்கு முன்பாக அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆல் ரவுண்டராக விளையாடி வந்தார்.

அவருக்கு காயம் ஏற்படவே அவரால் மும்பை இந்தியன்ஸ் அணியில் சரியாக விளையாட முடியவில்லை. அதன்பின் காயம் சரியான பின் அவர் குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் 2023 ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டி வரை சென்று பலம் வாய்ந்த அணி என்று அவர் நிரூபித்துக் கொண்டிருந்தார். இப்படி ஒரு சிறப்பான கேப்டனாக இருந்த போதும் மும்பை இந்தியன்ஸ் அவரை வாங்குவதற்காக குஜராத் அணியிடம் பேரம் பேசி உள்ளது.
குஜராத் அணியும் அவரை மும்பை அணிக்கு அனுப்பி விடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு பதிலாக மும்பை அணி யாரையும் குஜராத் அணிக்கு அனுப்பவில்லை. மும்பை அணி ஹர்திக் பாண்டியாவை வாங்கியுள்ளதாக மீண்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த செய்திகள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. மும்பை அணியில் மீண்டும் இணைந்தது குறித்து ஹர்திக் பாண்டியா கூறுகையில் இது பல அற்புதமான நினைவுகளைக் கொண்டுவருகிறது. மும்பை. வான்கடே. பல்டன். திரும்பி வந்ததில் மகிழ்ச்சி. 💙 #ஒரு குடும்பம் @மிபால்டன் என்றும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார்.
This brings back so many wonderful memories. Mumbai. Wankhede. Paltan. Feels good to be back. 💙 #OneFamily @mipaltan pic.twitter.com/o4zTC5EPAC
— hardik pandya (@hardikpandya7) November 27, 2023
இது குறித்து மும்பை அணியின் உரிமையாளராக ஆகாஷ் அம்பானி கூறுகையில், ஹர்திக் பாண்டியா இந்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது ஒரு மகிழ்ச்சியான ஹோம். ஹர்திக் பாண்டியா எங்கள் அணிக்கு ஒரு வலிமையான சமநிலையை அமைக்க உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியுடன் ஆன முதல் சந்திப்பு அவருக்கு மிகவும் சிறப்பாக இருந்தது அமைந்தது மீண்டும் அதே போல் இந்த இரண்டாவது இணையும் சிறப்பாக அமையும் என்று நான் என்றும் அவர் கூறியிருந்தார்.





