ஐபிஎல் 2023தொடரின் இன் 19வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. கொல்கத்தாவுக்கு எதிராக ஹாரி புரூக் அதிரடியாக பேட்டிங் செய்து சதம் அடித்தார். அவரது அதிரடியான பேட்டிங்கிற்கு ரசிகர்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஹைத்ராபாத்திற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா பந்துவீச முடிவு செய்தார்.

ஆனால் அவர் முடிவு செய்தது சரியான விஷியம் இல்லை என்று பின்னர் தான் தெரிந்தது. ஏனென்றால் தொடக்கம் முதலே ஹைதராபாத் அணியினரின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததது. கொல்கத்தாவின் பந்துவீச்சாளர்களை பறக்க விட்டனர் ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்ஸ்கள். இந்நிலையில் கடந்த கடந்த மூன்று போட்டிகளில் தோல்வியடைந்த புரூக், ஐபிஎல்லில் விளையாடுவதற்குத் தகுதியானவர் என்பதை நிரூபித்துள்ளார்.
அவர் கொல்கத்தாவுக்கு எதிராக ஹைதராபாத் அணிக்காக ஹாரி புரூக் 32 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதனை தொடந்து நீண்ட இன்னிங்ஸ் விளையாடி அணிக்கு பெரும் பங்களிப்பை செய்துள்ளார். பின்னர் தொடர்ந்து கொல்கத்தா அணி பந்துவீச்சளர்களை பார்க்கவிட்ட ப்ரூக் 55 பந்துகளில்100 ரன்கள் எடுத்த பிறகும் ஆட்டமிழக்காமல் 228 ரன்கள் கொண்டு வர உதவியாக இருந்தார். அதனை தொடர்ந்து இந்த இமாலய இலக்கை துரத்திய கொல்கத்தா முயற்சி செய்தும் வெற்றியடையமுடியவில்லை.

இந்நிலையில் முதல் போட்டிக்கு பிறகு பேசிய ஹைதராபாத் அணி வீரர் புரூக் கூறுகையில் “சூழல் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக எனக்குச் சிறிது சிக்கல் இருந்தது, ஆனால் பவர்பிளேயை எனக்குச் சாதகமாகப் பயன்படுத்த விரும்பினேன். எனவே மிடில் ஓவர்கள் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து மற்ற சிறுவர்களை அடிக்க அனுமதிக்க வேண்டும். இது ஒரு ஆடுகளத்தின் பெல்ட்டர், நாம் நமது லென்ட்களை சரியாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.
— INDIAN CRICKET (@FanOfIndianCric) April 14, 2023
எங்களுக்கு இனிமேல் தான் வேலை இருக்கிறது. என் காதலி இங்கே இருக்கிறாள், ஆனால் என் குடும்பத்தினர் அனைவரும் வெளியேறிவிட்டனர், அவர்கள் அனைவரும் என்னை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன் என தன்னுடைய சததிற்க்கு பிறகு தெரிவித்தார் என்றார் ஹாரி புரூக்.





