இந்திய அணியில் ஜிதேஷ் ஷர்மா தான் இந்திய அணியின் அடுத்த சூர்யகுமார் யாதவ் என்று இர்பான் பதான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தனர். இந்திய அணியில் தொடக்க ஆட்டகாரராக அயில் பல முன்னணி வீரர்கள் இருக்கின்றார்கள். ஆகையால் தான் இஷான் கிஷனுக்கு இவ்வளவு நாட்கள் அணியில் இருந்தும் அவருக்கு மைதானத்தில் விளையாடுவதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. தற்போது விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடி இருந்தார்.

இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவி இருந்தாலும் இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அடுத்த டி20 தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றது. கடந்த சில மாதங்களாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்ற நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்திய அணியின் ரசிகர்கள் எதிர்பாரத நிலையில் ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டியில் வெற்றி கோப்பையை கைப்பற்றியது.
இந்திய அணியின் தோல்விக்கு பிறகு ஆஸ்திரேலியா அணியுடன் ஐந்து டி20 தொடர்களை விளையாடி அதில் இந்திய அணி 4-1 என்று வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு ரின்கு சிங் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். இதில் இந்திய அணியின் கேப்டனாக சூரியகுமார்யாதவ் செயல்பட்டு இருந்தார். இந்திய அணி தற்போது அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை 2024 ஆம் ஆண்டுக்கு இந்திய அணியின் இளம் வீரர்களை தயார்படுத்தி வருகிறது.

இதில் இந்திய அணியின் இளம் வீரர்கள் சிறப்பாகவே செயல்பட்டு தங்களது இடத்தை உறுதிப்படுத்திவருகின்றனர். இந்திய அணியில் ருதுராஜ், ஜெய்ஸ்வால், ஜிதேஷ் ஷர்மா மற்றும் ரின்கு சிங் சிறப்பாகவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். எனவே இவர்களுக்கு இன்று நடக்க வுள்ள போட்டியில் கட்டாயம் அணியில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கேப்டன் சூர்யகுமார் யாதவிற்கு ஏற்பட்டுள்ளது. என்னெற்றால் முதல் போட்டியானது மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இஷான் கிஷன் விளையாட வேண்டும் என்றால் அவர் மேல் வரிசையில் தான் விளையாட வேண்டும். ஆனால் மேல் வரிசையில் விளையாடுவதற்கு இந்திய அணியில் நிறைய வீரர்கள் தற்பொழுது இருக்கின்றார்கள். எனவே அவருக்கு அங்கு இடம் கிடைப்பது மிகவும் கடினம். அவருக்கான இடத்தை உருவாக்குவது மிகவும் கடினமான விஷயம் இருந்தாலும் அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார். இந்திய அணியின் நிர்வாகம் என்ன நினைக்கின்றது என்பது நமக்கு தெரியாது. அவர் விளையாடுவதற்கு கடினமாக புதிய பந்து தரப்படுகிறது அவரால் பின் வரிசையில் சில விளையாட முடியாது.
இந்திய அணியில் விளையாட வேண்டும் என்றால் அங்கு ஸ்பின் பந்துகள் வீச வேண்டும். இது இஷான் கிஷனுக்கு மிகவும் கடினமாகவே அமையும். ஆனால் ஜிதேஷ் சர்மா அவ்வாறு கிடையாது. அவர் புதியதாக யோசித்து விளையாடுவார் அவர் சூரியகுமார் யாதவை போன்று அதிரடியாக விளையாடும் வீரர் அவர் பலவகையான ஷாட்களை அடிக்கும். அவர் சமிபத்தில் விளையாடியது நீங்களும் பார்த்திருப்பீர்கள். அவர் சமீபத்தில் விளையாடிய டி20 கிரிக்கெட் அவருடைய வளர்ச்சி சிறப்பாக இருக்கின்றது மிகவும் அருமையாக விளையாடிக் கொண்டு வருகிறார். அவருடைய ஸ்டிரைக் ரேட் மிகவும் அருமையாக இருக்கின்றது. மேலும் அவர் வேகம் மற்றும் ஸ்பின் இரண்டு பந்துகளையும் சிறப்பாக விளையாடும் வீரர் என்றும் இர்பான் பதான் கூறுகின்றார்.




