ரோஹித் ஷர்மா தோனியை போலவே செயல்படுகிறார். அவர் அடுத்த தோனியாக இருப்பார் என்று சுரேஷ் ரெய்னா கருத்து தெரிவித்துள்ளார். இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றனர். இதில் நான்கு போட்டி முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இருந்தது.இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ரன்களை அடித்து இருந்தது.

அதன்பின் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆரம்பத்தில் சற்று சொதப்பல் இருந்தாலும் அதன் பின் ஜுரெலின் சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணி 307 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதில் இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஜுரேல் 90 ரன்களிலும் ஜெய்ஸ்வால் 73 ரன்களையும் கில் 38 ரன்கள் அடித்திருந்தனர். இன்றைய நாளிலே மீண்டும் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணி 145 ரன்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதன் பின் பேட்டிங் செய்த இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி இறுதியில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இதன் மூலம் இந்திய அணி இந்தியாவில் நடந்த 17 தொடர்களையும் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது. அது மட்டும் அல்லாமல் கடந்த 10 வருடங்களுக்கு பிறகு 150 ரன்களுக்கு இருந்த இலக்கை இந்திய அணி இன்று தான் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் ஜுரேல் 129 ரன்களை அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு துணையாக இருந்தார்.

இது குறித்து ரேயனா கூறுகையில், அவர்தான் அடுத்த எம்எஸ் தோனி. நன்றாகச் செய்திருக்கிறார். தோனியைப் போல இளைஞர்களுக்கு நிறைய வாய்ப்புகளை வழங்கி வருகிறார். தோனியின் கீழ் நிறைய கிரிக்கெட் விளையாடினேன். சவுரவ் கங்குலி தனது அணிக்கு நிறைய ஆதரவளித்தார். அப்போது எம்எஸ் தோனி வந்து முன்னணியில் இருந்து வழிநடத்தினார். ரோஹித் சரியான பாதையில் செல்கிறார். அவர் ஒரு சிறந்த கேப்டன். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்ததற்கு ரோஹித் ஷர்மாவுக்கு பெருமை சேர்க்க விரும்புகிறேன்.

அவர் முதலில் சர்ஃபராஸுக்கு வாய்ப்பளித்தார், பின்னர் ஜூரெலை அணியில் இடம்பிடித்தார் என்றும் அவர் கூறி இருந்தார். இந்திய அணியின் கேப்டனாக தோனி சிறப்பாக செயல்பட்டு இருந்தார். அவர் மூன்று வடிவ சர்வதேச கோப்பைகளையும் அவர் வென்றுள்ளார். அவர் அவரது கேப்டன்சி காலத்தில் இளைஞர்களுக்கு சரியான வாய்ப்பு அளித்து அவர்களுக்கு உத்வேகம் அளித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





