இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலியும் 2022 t20 உலகக்கோப்பைக்கு பின்னதாக எந்த ஒரு டி20 போட்டியை விளையாடவில்லை. அவர்கள் இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பையில் 20 அணிகள் கலந்துகொள்ள உள்ளது. இந்திய அணி இந்த உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகிறது.

இந்த வருடம் ஜூன் மாதம் உலகக்கோப்பையானது தொடங்கவுள்ளது. அது குறித்து தான் தற்போது விவாதம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் உலகக்கோப்பையில் ஹர்திக் தான் கேப்டன்சி செய்வார் என்றும் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இந்திய அணியில் இருக்க மாட்டார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.ஆனால் தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான T20 தொடருக்கு அணியை அறிவித்துள்ளது.
அணியில் இருந்து சில முக்கிய வீரர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.
புவனேஸ்வர் குமார்: கடந்த T20 உலகக்கோப்பை போட்டியின் போது இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருந்தனர். இவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர்: கடந்த ஒரு நாள் உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடி இருந்தார். இருப்பினும் அவர் ஆரம்பத்தில் சற்று மெதுவாக தொடக்கம் அளித்து இருந்தார். இருப்பினும் அதன் பின் அவர் அணிக்கு சிறப்பான ரன்களை சேர்த்து இருந்தார். இருப்பினும் அவர் தற்போது ஆப்கானிஸ்தான் அணியில் அவர் இடம்பெறவில்லை.

கே.எல்.ராகுல்: இவரும் உலகக்கோப்பையில் மிடில் ஆர்டரில் ஸ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து சிறப்பாக ரன்களை சேர்த்து இருந்தனர். இவர் இந்திய அணிக்கு முக்கியமான விக்கெட் கீப்பராகவும் இருந்து வருகிறார். இவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் துனைகேப்டனாகவும் இருந்துள்ளார். இருப்பினும் அவரை ஏன் அணியில் சேர்க்கவில்லை என்பது தெரியவில்லை. இஷான் கிஷன்: டி20 கிரிக்கெட் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் கூட, ரோகித் ஷர்மா மீண்டும் அணியில் திரும்பியதால் ஏற்கனவே துவக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கில் இருப்பதால், இவரை மூன்றாவது துவக்க ஆட்டக்காரர் என்கின்ற இடத்திற்கு தேர்வு செய்ய மாட்டார்கள்.

யுஸ்வேந்திர சாஹல் : இந்திய அணிக்கு இவர் சிறப்பான சுழற்பந்து வீச்சாளராக இருந்து வந்தார். இருப்பினும் இவர் உலகக்கோப்பை போட்டியில் இது வரை அவருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. மேலும் குல்தீப் யாதவ் மற்றும் ரவி பிஷ்னோய் போன்ற வீரர்கள் இருப்பதால் அவருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் வீரர்கள், ரோஹித் ஷர்மா(c), சுப்மான் கில், ஜெயஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, சஞ்சு சாம்சண் சிவம் துபே, வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் அணியில் உள்ளனர்.





