உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 தற்போது இந்தியாவில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் இன்றைய 38 போட்டியில் டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியும் பங்களாதேஷ் அணியும் மோதின. இலங்கை அணி புள்ளி பட்டியல் ஏழாவது இடத்திலும் பங்களாதேஷ் அணி புள்ளி பட்டியலில் ஒன்பது இடத்திலும் இருந்து வருகிறது. இந்த இரு அணிகளும் அரை இறுதி சுற்றுக்கான வாய்ப்புகள் இழந்து விட்டது என்று சொல்லலாம்.

ஆனால் அதை தவிர்த்து வேறு அணிகளுக்கும் பாகிஸ்தானில் 2025 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சாம்பியன் டிராபிக்கு தகுதி பெற வேண்டும் என்று இருக்கின்றது. அதற்கு இந்த புள்ளி பட்டியலில் முதல் எட்டு இடங்களில் இருக்கும் அணிகள் மட்டுமே பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்கு பங்குபெறும் என்றும் விதி உள்ளது. ஆகையால் இவ்விரு அணிகளும் கடுமையான பயிற்சி மேற்கொண்டு இன்றைய போட்டியில் கலந்து இறங்கினார். டாஸ் என்ற பங்களாதேஷ் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது.
இலங்கை 49.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்களை குவித்து இருந்தது. அணியில் அதிகபட்சமாக அசலங்கா 108ரன்களையும் நிசாங்கா 41 ரன்களும் சதீரா 41ரன்களையும் குவித்தனர். பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சாளர்கள் ஷாகித் மூன்று விக்கெட்டுகளையும் ஹாசன் இஸ்லாம் தலா இரண்டு விக்கெட்டுகளையும் மீராஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.

இந்த போட்டியில் விசித்திரமான நிகழ்வு ஒன்று நடைபெற்றது 146 வருட கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நேரம் அதிகமாக எடுத்துக் கொண்டதற்காக ஏஞ்சிலோ மேத்யூஸ் அவர்களுக்கு நடுவரை விக்கெட் அளித்து இருந்தனர். இதுகுறித்து பேசிய அசலங்கா கூறுகையில் “சதம் அடிப்பது என்பது எப்பொழுது நல்ல உணர்வாகத் தான் இருக்கும் நான் எப்பொழுது மகிழ்ச்சியாக உணர்கிறேன் டைம் அவுட் முறையில் வெளியேறினார்.

அதன் பிறகு தனஞ்செழியாவும் நாங்கள் இருவரும் நல்ல பார்ட்னர்ஷிப்அமைத்தோம். அவருடன் இணைந்து விளையாட தான் எப்போதும் விரும்புவேன் அவர் கொஞ்சம் வேகமாக கொண்டு வருவார் மேலும் நாங்கள் இருவரும் அவரது இடது வலது காம்பினேஷன் அமைத்திருப்போம். இந்த ஆடுகளத்தில் 300 ரன்களை தாண்டி இருக்கும் வேண்டும் என்று நினைத்து இருந்தோம். ஆனால் முடியவில்லை. மேத்யூஸ் விக்கெட் ஸ்ப்ரிட் ஆப் கிரிக்கெட் கிடையாது ஆனால் அது ஒரு விதிமுறை என்றும் அவர் கூறியிருந்தார்.




