
ஐபிஎல் 2024 என்னும் மாபெரும் திருவிழா மார்ச் 22ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சன்ரைஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்ஸ் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தனர்.

அந்த நேரத்தில்தான் கொல்கத்தா அணியின் அதிரடி மன்னன் ரசல் ரிங்கு சிங்குடன் இணைந்து மாபெரும் பார்ட்னர்ஷிப் அமைத்து கொல்கத்தா அணிக்கு ரன்களை குவித்தனர். இதில் ரசல் 25 பந்துகளில் 64 ரன்களை அடித்து இருந்தார். அதில் நாம் 3 பவுண்டர்களும் ஏழு சிக்ஸர்களும் அடித்திருந்தார். ஒரு கட்டத்தில் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்ந்து வந்த நிலையில் 150 ரன்களை எட்டுமா என்று சந்தேகம் இருந்த நிலையில் அதன் பின் ரசலின் சிறப்பான ஆட்டத்தால் கொல்கத்தா அணி 20 அவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 28 ரன்களை அடித்தது.
அதன் பின்னர் 208 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வீரர்கள் ஆரம்பத்தில் சிறப்பான தொடக்கமளித்தனர். இடையில் மிடில் ஆர்டரில் அவர்களால் ரன் குவிக்க முடியாமல் திணறி வந்தனர். ஆனால் இருப்பினும் க்ளாசென் தனது திறமையான அபாரமான பேட்டிங்கால் 29 பந்துகளில் 63 ரன்கள் அடித்திருந்தார் அதில் ஒரு பவுண்டரி கூட கிடையாது எட்டு சித்தர்களை அடித்து இருந்தார்.

அவர் கடைசி ஒரு பந்தில் ஐந்து ரன்களை எடுத்தால் வெற்றி என்று நினைவில் அவர் அதற்கு முன்பாகவே ஆட்டம் இழந்து வெளியேறினார். புதிதாக வந்த கம்மின்ஸ் ரன் அடிக்க முடியாததால் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியிடம் தோல்வியை தழுவியது. இதில் ஆட்டநாயகன் விருது வென்ற ரசல் கூறுகையில், நான் எவ்வளவு நன்றாக பந்தை அடிக்கிறேன் என்பதை உணர்ந்தேன். நீங்கள் சிறப்பாக செயல்படுகிறீர்கள் என்பதைக் காட்டுகிறது.

எனக்கு என்ன வந்தாலும் அதற்கு எதிரே அடிக்க முயற்சி செய்தேன். கடந்த 2 ஆண்டுகளாக, பந்துவீச்சாளர்கள் எனக்கு எதிராக தங்கள் திட்டங்களை வைத்துள்ளனர். எல்லோரும் எனக்காக ஒரு திட்டம் வைத்திருப்பதை நான் அறிவேன். (KKR உடனான அவரது பயணத்தில்) நான் ஆரம்பத்தில் பெஞ்சில் இருந்தேன், நான் இந்த வழியில் தொடர்ந்து செயல்பட முடியும் என்று நம்புகிறேன். ஹர்ஷித் ரானா சிறப்பாக கடைசி ஓவர் வீசி இருந்தார். அவர் என்னிடம் கடைசி ஓவர் வீச வேண்டும் என்று கூர் இருந்தார். அதில் முதல் பந்தில் சிக்சர் போன உடன் அவர் சிறப்பாக பந்து வீசியிருந்தார்.





