ind vs eng 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. கடைசி போட்டியானது சில தினங்களுக்கு முன் தரம்சாலாவில் தொடங்கி நடைபெற்று முடிந்தது. இந்த ஒரு போட்டியில் இந்திய அணியின் வீரர் அஷ்வினும் இங்கிலாந்து அணியின் வீரர் பேர்ஸ்டோவும் தங்களது 100வது டெஸ்ட் போட்டியில் இன்று களமிறங்கினார்கள் இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணி 57.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்களை மட்டுமே அடித்து இருந்தது. அதில் இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக க்ராலி 69 ரன்களையும் பேர்ஸ்டோ 29 ரன்களையும் ஜோ ரூட் 26 ரன்களையும் அடித்திருந்தனர். இந்திய அணியின்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அதற்கு பின் வந்த பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினார்.அதன் பின் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 477 ரன்களை அடித்து இருந்தனர்.
அதன் பின் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 195 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. எனவே இந்திய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. ஆண்டர்சன் இதுவரை 187 போட்டிகளில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அவரது 32 முறை 4 விக்கெட்டுகளையும் 32 முறை 5 விக்கெட்டுகளையும் மூன்று முறையும் 10 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார்.இதுவரை எந்த ஒரு வேகப்பந்து வீச்சாளரும் 700 விக்கெட்டுகளை பதிவு செய்ததில்லை.
இவர் தான் முதல் வேகம் பந்துவீச்சாளர் 700 வது விக்கெட்டை பதிவு செய்தார். இவருக்கு முன் முரளிதரன் 800 விக்கெட்டுகளை வார்னே 708 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவர் தற்பொழுது அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் வீரர் பட்டியலில் மூன்றாவது இடத்திலும் இருந்து வருகிறார் இங்கிலாந்து அணி தற்போது 5 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களில் விளையாடி வருகிறது. போட்டி குறித்தும் அவரது சாதனை குறித்தும் ஆண்டர்சன் கூறுகையில், தனிப்பட்ட மைல்கற்களைப் பெறுவதற்காக நான் கிரிக்கெட் விளையாடவில்லை, நான் நினைக்கிறேன்.

நான் ஆட்டங்களில் வெற்றி பெற விரும்புகிறேன். நான் ஒரு குழு விளையாட்டை விளையாட விரும்புகிறேன், அப்போதுதான் எனக்கு மிகப்பெரிய சலசலப்பு ஏற்படுகிறது. தொடரில் 4-1 என்ற கணக்கில் தோற்றதால் நான் கொஞ்சம் தட்டையாக இருக்கிறேன். நான் மோசமாகிவிடவில்லை. மேலும் ஒவ்வொரு நாளும் விளையாடி வலைகளில் சிறப்பாகச் செயல்பட முயற்சிப்பதில் எனக்கு இன்னும் மகிழ்ச்சி இருக்கிறது.





