
விராட் கோலிக்கும் கம்பீருக்கும் சமீப காலமாகவே வாய் போர் நடந்து கொண்டு தான் வருகிறது. T20 உலக கோப்பையானது அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி இடம் இறுதிப் போட்டியில் தோல்வி தோல்வியை தழுவிய நிலையில் அடுத்த வருடம் உலக்கோப்பை போட்டியில் கோப்பையை வெல்ல வேண்டும் என்று முனைப்பில் இருக்கின்றது. இந்திய அணிக்கு கோப்பை என்பது கனவாகவே இருந்து வருகிறது. அடுத்த வருடம் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில் கோப்பையில் வேண்டுமென்று இந்திய அணி முனைப்போடு இந்திய அணி விளையாட உள்ளது.

ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி உலகக்கோப்பை பின் 5 தொடர்களை கொண்ட டி20 போட்டியில் 4-1 என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 உலக கோப்பையானது அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா போன்ற பல்வேறு அணிகள் இந்த உலக கோப்பை போட்டியில் பங்கேற்க தயாராகி வருகிறது. அது மட்டுமல்லாமல் 2011 ஆம் ஆண்டு பிறகு அதிக அணிகளை கொண்ட உலக கோப்பை போட்டியாகவும் இது அமைய உள்ளது. அந்த அளவிற்கு உலகக் கோப்பை போட்டியில் 20 அணிகள் கலந்து கொள்ள தயாராகி உள்ளது.

கோலி மற்றும் கம்பீர் ஆகியோர் கடந்த ஐபிஎல் போது மைதானத்தில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு இருந்தனர். அது அப்போது பெரும் சர்ச்சையானது. இது குறித்து இருவரும் அவர்களது கருத்துக்களை அவ்வபோது தெரிவித்து வந்தனர்.அதன் பின் கம்பீர் இடம் விராட் கோலி குறித்து எதாவது கேள்வி கேட்டால் அதற்க்கு அவர் வேறு எதாவது பதில் சொல்லி அதில் இருந்து நழுவி விடுவார். ஆனால் அவர் விராட் கோலி ஆரம்ப காலத்தில் விராட் கோலியிடம் இருந்தது குறித்து தற்போது பேசியுள்ளார்.
2009 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான கொல்கத்தா ஒருநாள் போட்டியில் தனது ஆட்ட நாயகன் விருதை கோஹ்லிக்கு வழங்குவதற்கான தனது சைகையையும் கம்பீர் திறந்து வைத்தார். முன்னாள் கிரிக்கெட் வீரர் இந்த சம்பவத்தை குறைத்து மதிப்பிட்டு, தனது முதல் சர்வதேச சதத்தை அடித்த ஒரு இளைஞரை மட்டுமே ஊக்கப்படுத்த விரும்புவதாக கூறினார். “உண்மையாக, நான் செய்யக்கூடாத எதையும் நான் செய்யவில்லை. மக்கள் அதைப் பற்றி அதிகம் பேசத் தேவையில்லை.
நான் ஏன் அதைக் கொடுத்தேன் என்றால், நான் ஒரு இளைஞனாக அணிக்கு வந்தபோது, என் சீனியர்களிடமிருந்து இதையே எதிர்பார்த்திருப்பேன். முதல் சதம் எப்போதுமே மிகவும் சிறப்பு வாய்ந்தது,” என்று அவர் கூறினார். “நாங்கள் 300-க்கு மேல் துரத்தினோம், சச்சின் மற்றும் சேவாக் வெளியேறிய பிறகு ஈடன் கார்டனில் 20/2 ஆக இருந்தோம். அந்த போட்டியில் விராட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒரு இளம் கிரிக்கெட் வீரரின் முதல் சதத்தை மறக்க முடியாததாக மாற்ற விரும்பினேன்,” என்று கம்பீர் மேலும் கூறினார்.





