
உலக கோப்பையானது அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி இடம் இறுதிப் போட்டியில் தோல்வி தோல்வியை தழுவிய நிலையில் அடுத்த வருடம் உலக்கோப்பை போட்டியில் கோப்பையை வெல்ல வேண்டும் என்று முனைப்பில் இருக்கின்றது. இந்திய அணிக்கு கோப்பை என்பது கனவாகவே இருந்து வருகிறது. அடுத்த வருடம் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில் கோப்பையில் வேண்டுமென்று இந்திய அணி முனைப்போடு இந்திய அணி விளையாட உள்ளது.

டி20 உலக கோப்பையானது அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா போன்ற பல்வேறு அணிகள் இந்த உலக கோப்பை போட்டியில் பங்கேற்க தயாராகி வருகிறது. அது மட்டுமல்லாமல் 2011 ஆம் ஆண்டு பிறகு அதிக அணிகளை கொண்ட உலக கோப்பை போட்டியாகவும் இது அமைய உள்ளது. அந்த அளவிற்கு உலகக் கோப்பை போட்டியில் 20 அணிகள் கலந்து கொள்ள தயாராகி உள்ளது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கில்லுக்கு தொடக்க ஆட்டக்காரர் இடம் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டடது.

இருப்பினும் தற்போது ஹர்திக் பாண்டியாவிற்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் யார் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட போகிறார்கள் என்ற குழப்பம் ரசிகர்கள் இடையே இருந்து வந்துள்ளது. இந்திய t20 அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய கட்டாயம் அணியில் இருக்க வேண்டும் என்று முன்னால் இந்திய வீரர்கள் பலரும் அவர்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த இவர்களது இடம் உறுதி செய்யப்படாமல் இருந்தாலும் கில் இடம் உறுதியாகி விட்டது என்று சொல்லலாம். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இந்த உலகக்கோப்பை போட்டியில் சில போட்டிகளில் சிறப்பாக செயல் பட்டு இருந்தாலும் இந்திய அணி உலகக்கோப்பையை நழுவ விட்டது. இது குறித்து கில் கூறுகையில்
இந்த ஆண்டு எனக்கு சிறந்த ஆண்டாக இருந்து வருகிறது. இந்த உலகக் கோப்பையில் நாங்கள் கோப்பை தவற விட்டு விட்டோம் ஆனால் எங்களுடைய அதிர்ஷ்டம் அடுத்த வருடமே மற்றும் ஒரு உலகக் கோப்பை வருகிறது. நாங்கள் அதை எதிர்நோக்கி ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றோம். அடுத்த வருடம் நாங்கள் விளையாட போக இருக்கும் உலக கோப்பை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மற்றும் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் ஆகியவை எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று.

எனவே நாங்கள் இந்த போட்டிகளை எல்லாம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றோம் நான் அடுத்த குஜராத் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று செயல்பட இருக்கின்றேன். இந்த கேப்டன் பதவியில் நிறைய கற்றல்களை கற்றுக்கொள்ள இருக்கின்றேன். எனக்கு மேலும் என்னை மேம்படுத்த இந்த கேப்டன் பதவி எனக்கு உதவும். நான் கடந்த ஒரு வாரம் ஆக ஜிம்மில் மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை பயிற்சி செய்து வருகிறேன். அடுத்து நடைபெறவிருக்கும் டி20 தொடருக்கு நான் என்னை தயார் படுத்திக் கொண்டுள்ளேன் என்றும் அவர் கூறியிருந்தார்.





