இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலியும் 2022 t20 உலகக்கோப்பைக்கு பின்னதாக எந்த ஒரு டி20 போட்டியை விளையாடவில்லை. அவர்கள் இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பையில் 20 அணிகள் கலந்துகொள்ள உள்ளது. இந்திய அணி இந்த உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகிறது.

நடந்து முடிந்த உலகக்கோப்பையில் விராட் கோலி தான் அதிக ரன்களை அடித்துள்ளார். அதற்க்கு அடுத்த படியாக ரோஹித் ஷர்மா இரண்டாவது இடத்தில் இருந்துள்ளார். விராட் கோலி 765 ரோஹித் ஷர்மா 597 ரன்களும் அடித்துள்ளனர். அவர்கள் பேட்டிங்கில் சிறந்த பார்மில் இருந்து வருகின்றனர். 2022 உலகக்கோப்பைக்கு பின்னதாக ரோஹித் ஷர்மா t20 போட்டியில் விளையாடத நிலையில் ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வந்தார்.
இந்த வருடம் ஜூன் மாதம் உலகக்கோப்பையானது தொடங்கவுள்ளது. அது குறித்து தான் தற்போது விவாதம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் உலகக்கோப்பையில் அவர் தான் கேப்டன்சி செய்வார் என்றும் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இந்திய அணியில் இருக்க மாட்டார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.ஆனால் தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான T20 தொடருக்கு அணியை அறிவித்துள்ளது.இதில் ஹர்திக் பாண்டியா மற்றும் ரோஹித் ஷர்மா குறித்து முன்னாள் இந்திய வீரர் கிரண் மோரே கூறுகையில்,

முதலில், ஹர்திக் உடல் தகுதி பெற வேண்டும். அவர் முதலில் கிரிக்கெட் விளையாடத் தொடங்க வேண்டும், அது மிகவும் அவசியம். அவர் அதைச் செய்தவுடன், ஹர்திக் பாண்டியா நிச்சயமாக அனைத்து பெட்டிகளையும் டிக் செய்வார். முன்னதாக கேப்டனாகவும் இருந்துள்ளார். தேர்வாளர்களின் சிந்தனை, உள்ளே என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் ஹர்திக் ஃபிட் ஆனவுடன் அணிக்குள் வருவார். உலகக் கோப்பைக்கு முன் அவர் போட்டிகளில் விளையாட வேண்டும். அவர் எப்போது தொடங்குவார் என்று தெரியவில்லை, அநேகமாக ஐபிஎல்லில், ஆனால் அவர் கடுமையாக தயாராகி வருகிறார்.
அவர் உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர் மற்றும் ஒவ்வொரு அணியும் அவரைப் பெற விரும்புவார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் (தேர்வுக்குழு) சிந்தனை சற்று மாறியது. முன்னதாக அவர்களின் சிந்தனை என்னவென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் இருவரும் உலகக் கோப்பையில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் மற்றும் தென்னாப்பிரிக்கா தொடரிலும் ஃபார்மில் இருந்தனர். உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா கேப்டனாக இருந்து நாங்களும் பைனலுக்கு வந்த விதம், விதிவிலக்கான இன்னிங்ஸ், அவர் காட்டிய ஆக்ரோஷம், அதனால் சிந்தனை சற்று மாறியது.

எனவே இருவரும் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர், இது இந்திய கிரிக்கெட்டுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தி என்றும் கிரண் மோரே கூறியிருந்தார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் வீரர்கள், ரோஹித் ஷர்மா(c), சுப்மான் கில், ஜெயஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, சஞ்சு சாம்சண் சிவம் துபே, வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் அணியில் உள்ளனர்.




