ipl2024க்கான ஏலமானது துபாயில் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. அதில் அனைத்து அணிகளும் வீரர்களை வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வீரர்களை போட்டி போட்டு வங்கியுள்ளது. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் வீரர் ஸ்டார்கை அதிக விலையான 24.75 கோடிக்கு ஏலத்தில் கொல்கத்தா அணி அவரை வாங்கியிருந்தது. அதற்க்கு அடுத்தபடியாக ஹைதராபாத் அணி 20.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்து இருந்தது.

இது போன்ற வெளிநாட்டு வீரர்களை ஐபிஎல் அணிகள் அதிக விலைக்கு எடுத்தது இந்திய ரசிகர்களை வருத்தமடைய செய்தது. அதற்க்கான காரணம் என்னவென்று பார்த்தால் இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியிருந்தது. இந்த ஏலம் நடைபெறுவதற்கு முன்னதாகவே இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அஷ்வின் கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் 15கோடிக்கு மேல் ஏலம் போவார்கள் என்று கூறி இருந்தார்.
அதற்க்கு ஏற்றார் போல் தான் அவர்கள் ஏலத்தில் சென்றார்கள். கம்மின்சை வாங்குவதற்கு பெங்களூரு அணியும் ஹைதராபாத் அணியும் கடும் போட்டி இட்டது. ஆனால் ஹைதராபாத் அணி அவரை வாங்கியுள்ளது. மற்றொரு பக்கம் கொல்கத்தா அணியும் குஜராத் அணியும் ஸ்ட்ரக்கை வாங்குவதற்கு போட்டியிட்டுகொண்டது. அதில் கொல்கத்தா தான் வெற்றி பெற்று ஐபிஎல்லில் புதிய சாதனையை செய்து இருந்தது.
இதில் ஸ்டார்க் பல அன்ன்டுகளாக ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் இருந்தார் இருப்பினும் அவரை அவ்வளவு முக்கியதுவம் கொடுத்து ஏன் வாங்க வேண்டும் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. அதே போல் தான் கம்மின்சும் அவரும் t20 போட்டியில் சிறந்த வீரர் என்றால் அதுவும் கிடையாது. இது குறித்து ஸ்டார்க் கூறுகையில் நான் ஆஸ்திரேலியா அணிக்காக விளையாட வேண்டுமா அல்லது ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டுமா எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று முக்கிய முடிவுகளை எடுத்து இருந்தேன்.

அதில் ஐபிஎல் தொடரில் விளையாடாமல் இருக்க வேண்டும் என்பது தான். அது எனக்கு டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாட உதவியது. கடந்து போனது பற்றி எல்லாம் நான் மகிழ்ச்சியடைகிறேன். அதில் எனக்கு வருத்தம் ஏதும் கிடையாது.தற்போது ஐபிஎல் தொடரில் இவ்வளவு தொகைக்கு என்னை ஏலத்தில் எடுத்தது எனக்கு மகிழ்ச்சியாக இருகின்றது. நன்றி உணர்வுடனும் உற்சாகமாகவும் இருக்கிறேன். இந்த இரவை விவரிக்க நிறைய வார்த்தைகள் உண்டு என்றும் அவர் கூறியிருந்தார்.




