இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலியும் 2022 t20 உலகக்கோப்பைக்கு பின்னதாக எந்த ஒரு டி20 போட்டியை விளையாடவில்லை. அவர்கள் இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பையில் 20 அணிகள் கலந்துகொள்ள உள்ளது. இந்திய அணி இந்த உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகிறது.

நடந்து முடிந்த உலகக்கோப்பையில் விராட் கோலி தான் அதிக ரன்களை அடித்துள்ளார். அதற்க்கு அடுத்த படியாக ரோஹித் ஷர்மா இரண்டாவது இடத்தில் இருந்துள்ளார். விராட் கோலி 765 ரோஹித் ஷர்மா 597 ரன்களும் அடித்துள்ளனர். அவர்கள் பேட்டிங்கில் சிறந்த பார்மில் இருந்து வருகின்றனர். 2022 உலகக்கோப்பைக்கு பின்னதாக ரோஹித் ஷர்மா t20 போட்டியில் விளையாடத நிலையில் ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வந்தார்.

இந்த வருடம் ஜூன் மாதம் உலகக்கோப்பையானது தொடங்கவுள்ளது. அது குறித்து தான் தற்போது விவாதம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வரும் உலகக்கோப்பையில் அவர் தான் கேப்டன்சி செய்வார் என்றும் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இந்திய அணியில் இருக்க மாட்டார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.ஆனால் தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான T20 தொடருக்கு அணியை அறிவித்துள்ளது. இதில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி பற்றி முன்னாள் இந்திய வீரர் கூறுகையில் தாஸ் குப்தா கூருகையில்,
“டி20 வடிவத்தில் அணி முன்னேறிவிட்டதாக நினைத்தேன். எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் 50 ஓவர் உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. மூத்த இந்திய வீரர்களின் முக்கிய விமர்சனம் உள்நோக்கம் இல்லாதது. டி20 வடிவத்தில்,” என்று தாஸ்குப்தா ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் கூறினார். விண்டீஸ் தடங்களில் இந்தியாவுக்கு கோலியின் அனுபவம் தேவைப்படும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கூறினார்.

ஆடுகளங்கள் நிறைய சுழல்களை வழங்குகின்றன மற்றும் இயற்கையில் மந்தமானவை. “ரோஹித் மற்றும் விராட் ஆகியோருடன் மேற்கிந்தியத் தீவுகளில் நாம் பெறக்கூடிய ஆடுகளங்கள் என்னவாக இருக்கும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். 180-200 ஆடுகளங்கள் அல்லது 160களில் ஏதாவது ஒன்றை எதிர்பார்க்கிறோமா” என்று தாஸ்குப்தா மேலும் கூறினார். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் வீரர்கள், ரோஹித் ஷர்மா(c), சுப்மான் கில், ஜெயஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் ஷர்மா, சஞ்சு சாம்சண் சிவம் துபே, வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோர் அணியில் உள்ளனர்.




