BCCI தனது அணியை முதலில் தனது நாட்டிற்கு அனுப்ப ஒப்புக் கொள்ளும் வரை, இந்த ஆண்டு ஐசிசி மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை உள்ளிட்ட போட்டிகளுக்கு பாகிஸ்தான் அண்டை நாட்டிற்கு செல்லக்கூடாது என்று பேட்டிங் ஜாவேத் மியான்டட் அதிரடியாக பேசியுள்ளது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஒருநாள் உலகக்கோப்பை போட்டியானது வரும் ஆக்டோபர் மாதம் 15ஆம் தேதியில் இருந்து தொடங்குகிறது.

இதன் படி வரும் அக்டோபர் 15-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கும் உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுடன் பாகிஸ்தான் விளையாட உள்ளது. ஆனால் இதற்கு பலவிதமான எதிர்ப்புகள் பாகிஸ்தான் தரப்பில் இருந்து கூறப்பட்டு வரும் நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான ஜாவெட் மியன்டாட் இந்த போட்டிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில் “பாகிஸ்தான் 2012 இல் இந்தியாவுக்கு வந்துள்ளது, அதே போல 2016ஆம் ஆண்டில் கூட பாகிஸ்தான் இந்தியாவிற்கு வந்தது. எனவே இது இப்போது இந்தியர்கள் இங்கு வர வேண்டிய முறை. நான் ஒருவேளை முடிவை எடுக்க வேண்டும் என்றால், நான் எந்தப் போட்டியிலும், உலகக் கோப்பையிலும் விளையாட இந்தியாவுக்குச் செல்லமாட்டேன். நாங்கள் இந்தியாவுடன் விளையாட எப்போதும் தயாராக இருக்கிறோம், ஆனால் அவர்கள் ஒருபோதும் அதே முறையில் பதிலளிக்க மாட்டார்கள்.

பாகிஸ்தான் கிரிக்கெட் பெரியது. நாங்கள் இன்னும் தரமான வீரர்களை உருவாக்கி வருகிறோம். எனவே நாங்கள் இந்தியாவுக்குச் செல்லாவிட்டாலும் அது எங்களுக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை என்றார் மியான்டட் . இந்திய அணி கடைசியாக 2008ஆம் ஆண்டு 50 ஓவர் ஆசியக் கோப்பைக்காக பாகிஸ்தானுக்குச் சென்றது. அன்றிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் பதட்டங்கள் காரணமாக அவை நிறுத்திவைக்கப்பட்டது.
پاکستان کو ورلڈ کپ کیلئے بھارت نہیں جانا چاہیئے… مودی نے کرکٹ کیساتھ بھارت کو بھی تباہ کردیا ہے، جاوید میانداد#Pakistan #India #AsiaCup2023 #Cricket pic.twitter.com/kpmSJkEsqs
— Ali Hasan 🏅 (@AaliHasan10) June 18, 2023
இதனால் கிரிக்கெட் விளையாட்டை அரசியலுடன் கலக்கக்கூடாது என மியான்டட் தெரிவித்தார். இது குறித்து அவர் பேசுகையில் “ஒருவரால் அண்டை நாடுகளைத் தேர்ந்தெடுக்க முடியாது, எனவே ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து வாழ்வது நல்லது என்று நான் எப்போதும் கூறுவேன். கிரிக்கெட் என்பது மக்களை ஒருவருக்கொருவர் நெருக்கமாகக் கொண்டுவரும் மற்றும் நாடுகளுக்கு இடையிலான தவறான புரிதல்களையும் குறைகளையும் நீக்கக்கூடிய ஒரு விளையாட்டு என்று நான் நினைக்கிறன்.
வரும் ஆசிய கோப்பை போட்டியானது சில பிரச்சைகளின் காரணமாக ஹைப்ரிட் போட்டியாக விளையாட பாகிஸ்தான் தள்ளப்பட்டது. இதனால் இந்தியா மூன்று போட்டிகளை இலங்கையில் ஆடுகிறது. மேலும் இது குறித்து பேசிய அவர் கூறுகையில் “ஆசியா கோப்பைக்காக இந்தியா பாகிஸ்தானுக்கு வராது. எனவே நாங்களும் இப்போது வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் இது என்று மியான்டட் கூறினார்.





