உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கும் தற்போது வரை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடர் என்பது இளம் வீரர்களை கண்டறியும் பொருட்டு உருவாக்கப்பட்ட நிலையில் அதன் வேலையே சரியாக செய்து வருகிறது. அந்த வகையில் லக்னோ அணியின் வீரர் மயங்க் யாதவ் தன்னுடைய வேகமான பந்துவீச்சினால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துளார்.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மயங்க் யாதவின் வேகம் மணிக்கு 150 கிலோ மீட்டருக்கு மேலே இருந்த காரணத்தினால் இவரின் மீது பலரின் பார்வையும் பட்டது. மேலும் இந்தியாவின் எதிர்கால வேகப்பந்து வீச்சாளராக வருவதற்கும் வாய்ப்பு இருப்பதாக பல கிரிக்கெட் வல்லுநர்கள் கூறிவருகின்றனர். இந்தியாவின் தலைநகரான டெல்லியை சேர்ந்தவர் 21 வயதான வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ். மயங்க்யாதவ் உள்நாட்டு கிரிக்கெட்டில் டெல்லி அணியை பிரதிநிதித்தி இருந்தார்.
இதில் அவர் சிறப்பாக செயல்பட்டதால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். எல்லா வடிவங்களிலும் முழுவதும் ஒரு வேகப்பந்து வீச்சாளராக 51 விக்கெட்டுகளுடன் தனது திறனை வெளிப்படுத்தினார். இதுவே அவர் ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள காரணமாக இருந்தது. மேலும் சையத் முஷ்டாக் அலி கோப்பை மற்றும் ராஞ்சி கோப்பை போன்ற தொடரில் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.

ஐபிஎல்லில் அவரது விரைவான உயர்வு அவரது அர்ப்பணிப்பு மற்றும் திறமைக்கு ஒரு சான்றாகும், மேலும் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கான நம்பிக்கைக்குரிய வாய்ப்பாக அவரை நிலைநிறுத்துகிறது. தொடை காயம் மற்றும் தொடர்ச்சியான சில காயங்களின் காரணமாக முந்தைய சீசனைத் தவறவிட்டார் மயங்க் யாதவ். பின்னர் இந்த தொடர்ச்சியான பின்னடைவுகளுக்குப் பிறகு ஐபிஎல்லில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்து.

இந்நிலையில் கடந்த குராஜாத் அணிக்கு எதிரான போட்டியில் மயங்க் யாதவ் சிறப்பாக இல்லாதது போல தெரிந்தது. இது குறித்து பேசிய லக்னோ அணியின் CEO கூறுகையில் “மயங்க் அடிவயிற்றின் கீழ் பகுதியில் வலியை உணர்ந்தார், முன்னெச்சரிக்கையாக அடுத்த வாரத்தில் அவரது பணிச்சுமையை நாங்கள் நிர்வகிக்கிறோம். அவரை விரைவில் களத்தில் காண்போம் என நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் மயங்க் யாதவ் குறித்து பேசிய முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் இயான் பிஷப் கூறுகையில் “மயங்க் யாதவின் சிறப்பு மற்றும் அவரிடம் இறுக்கும் திறமையை கடந்த ஒரு வாரமாக இந்த யோசனையை சக ஊழியருடன் தனிப்பட்ட முறையில் விவாதித்து வருகிறேன். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவருக்கு தனிப்பட்ட S & C பயிற்சியாளரை நியமிப்பது மற்றும் மருத்துவ நிபுணத்துவத்தை வைத்து அவரை ஆண்டு முழுவதும் கண்காணிக்க கிரிக்கெட்டில் இது ஒரு சரியான நேரம்.





