இந்திய அணியின் முன்னாள் வீரரான அம்பத்தி ராயுடு ஐபிஎல் 2023 போட்டிக்கு பிறகு இந்தியாவின் அணைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவித்தார். ராயுடு CSK இன் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார், வெறும் எட்டு பந்துகளில் 19 ரன்கள் எடுத்தார். ஈர்க்கக்கூடிய காட்சி சிஎஸ்கே இலக்கை துரத்த உதவியது மட்டுமல்லாமல், ஐபிஎல் வரலாற்றில் ராயுடுவை வெற்றிகரமான வீரராக மாற்றியது, ரோஹித் சர்மாவின் ஆறு ஐபிஎல் கோப்பைகளுடன் சாதனையைப் சமன் செய்தார்.

இதனிடையே சமீபத்திய செய்திகளில், ராயுடு அரசியலுக்கு வர விருப்பம் தெரிவித்தார். தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்திகளின்படி, அவர் ஆந்திரப் பிரதேச முதல்வர் என் ஜெகன் மோகன் ரெட்டியின் YSRCP கட்சியில் சேருவார் என்றும், 2024 தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் இருந்து இந்திய அணியில் இருந்தும் ஓய்வை அறிவித்த அம்பதி ராயுடு எம்எல்சி சீசனுக்காக டெக்சாஸ் சூப்பர் கிங்ஸுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் மீண்டும் மஞ்சள் உடையில் கிரிக்கெட்டிற்கு திரும்பினார்.
ஆனால் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, இந்தியா வீரர்கள் ஓய்வு பெற்ற சில வாரங்களிலேயே மீண்டும் வெளிநாட்டில் விளையாட சென்று விடுகிறன்றர்.வெளிநாட்டிற்கு சென்று விளையாட வேண்டும் என்ற எண்ணத்தோடே ஓய்வு முடிவுகளை அவர்கள் அறிவிப்பது போல தெரிகிறது. இந்த விஷயத்தை தடுக்கும் விதமாக ஓய்வு அறிவித்த பிறகு சில காலம் கழித்தே வெளிநாட்டில் நடக்கும் லீக் போட்டிகளில் விளையாட அனுமதி வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் உறுதியாகும் பட்ச்சத்தில் சில காலம் கடந்தே அம்பத்தி ராயுடு வெளிநாட்டில் நடக்கும் லீக் போட்டிகளில் கலந்து கொள்ள முடியும் என்ற பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை உருவாகும். இதனால் எம்எல்சி சீசனுக்காக டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விளக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் சொந்த காரணங்களுக்காக அம்பதி ராயுடு விளக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட நிலையில் தான் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை கொடுத்துள்ளது. அதாவது அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக முன்னாள் சென்னை அணியின் வீரரான தென் ஆப்பிரிகாபை சேந்த இம்ரான் தாகிரை ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இம்ரான் தாகிரை இதுவரையில் மொத்தமாக டி20 போட்டிகளை பொறுத்தவரையில் 378 போட்டிகளில் ஆடியிருக்கிறார். மேலும் அதில் 469 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

மேலும் டெக்சாஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் டுபிளேஸியும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் என்பதினால் இவர்களுக்கு இடையே புரிதல் சரியாக இருக்கும். அதே போல சென்னை அணியின் பயிற்சியாளர் பிராவோ மற்றும் தொடக்க வீரர் கான்வே மற்றும் டேவிட் மில்லர் உள்ளிட்டோரும் இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





