இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் T20 மற்றும் ODI போட்டிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இந்திய அணிய டெஸ்ட் போட்டிகளை விளையாடி வருகிறது. அதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோல்வியை தழுவி இருந்தது. இன்றைய போட்டி முந்தைய போட்டிக்கு முழுவதும் மாறுபட்டு இருந்தது. அந்த போட்டியானது மூன்று நாட்களிலே முடிவடைந்த நிலையில் இந்திய அணியின் மோசமான பேட்டிங் மற்றும் பவுலிங் காரணமாக தோல்வியை தழுவியது.

இருப்பினும் அதனை ஈடுகட்டும் வகையில் நேற்று இந்திய அணி செயல்பட்டு இருந்தது. இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதில் முதல் நாளில் இன்று தொடக்கத்தில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி முதல் செஷன் முடிவடைவதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 55 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தது. தென்னாப்பிரிக்கா அணி முதல் நாள் இன்னிங்க்ஸில் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 55 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
தென்னாப்பிரிக்கா அணி சார்பில் அதிக பட்சமாக வெர்ரின்னே 15 ரன்களும் பெடிகம் 12 ரன்னிலும் ரபாடா 5 ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி சார்பில் சிராஜ் 6 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணியை சுருட்டி இருந்தனர். அதன் பின் முதல் மீண்டும் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணி 153 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. இதில் 7 இந்திய வீரர்கள் ரன் ஏதும் எடுக்கவில்லை.

இந்திய அணியின் அதிகபட்சமாக கோலி 46 ரன்களிலும் ரோஹித் 39 ரன்களும் கில் 36 ரன்களும் அடித்து இருந்தனர். அதே நாளில் 2வது இன்னிங்க்சில் மீண்டும் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி நேற்றைய நாள் முடிவில் 62-3 என்ற நிலையில் இருந்தது. இன்றைய நாள் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணியின் அதிகம் தான் அதிகம் இருந்து. இதில் தென்னாப்பிரிக்கா அணி 176 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக மார்கரம் 106 ரன்னிலும் ஜான்சன் 11 ரன்னிலும் பெடிகம் 11 ரன்களை மட்டுமே எடுத்து இருந்தனர். இந்திய அணி சார்பில் பும்ரா 6 விக்கெட்டுகளும் முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளும் சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். 79 ரன்கள் தென்னாப்பிரிக்கா அணி முன்னிலையில் இருந்த நிலையில் அதன் பின் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன்படுத்தி இருந்தது. இது போட்டி குறித்து பும்ரா கூறுகையில்,

நான் முன்பே சொன்னது போல் இந்த மைதானம் என் இதயத்தில் தனி இடத்தைப் பிடிக்கும். எனது முதல் ஆட்டத்தின் இனிய நினைவுகள் மற்றும் மகிழ்ச்சி எனக்கு நன்றாக இருந்தது. பயணம் 2018 இல் தொடங்கியது மற்றும் எல்லா நிலைகளிலும் தாக்கத்தை உருவாக்க விரும்பினோம். இந்தியாவில், சுழற்பந்து வீச்சாளர்கள் நிறைய வேலை செய்கிறார்கள். அணி இப்போது ஒரு மாற்றத்தை கடந்து செல்கிறது, ஆனால் செய்தி ஒன்றுதான். தொடர்ந்து வருவது கடினம்; இந்த விளையாட்டில் எங்களால் அதை செய்ய முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். இது நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை ஆனால் ஒரு சிறந்த தொடர் என்றும் அவர் கூறியிருந்தார்.




