பாக்கிஸ்தான் அணியை வென்று வரலாற்றை இந்திய அணி தக்க வைத்துள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 அக்டோபர் ஐந்தாம் தேதி கோலாகலமாக தொடங்கியது. அதில் இன்று உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்திய பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதி வருகிறது. இந்திய பாகிஸ்தானங்களுக்கு எதிரான போட்டிகள் இந்தியா அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.மேலும் மேலும் இந்தியா அந்த வரலாற்று தக்கவைத்துக் கொள்ள தீவிரமாக விளையாடும் ஆனால் அதே சமயத்தில் பாகிஸ்தான் அந்த வரலாற்றை உடைப்பதற்காக கடுமையான முறையில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி முதலில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அணிக்கு நன்றாக தொடக்கத்தை கொடுத்த சிறிது நேரத்திலேயே முதல் விக்கெட்டாக அப்துல் அஸபிக் 20 ரன்கள் சிராஜ் பந்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதன் பின்பு நிதானமாக வெளியே வந்த இம்ரான் உல் ஹக் ஹர்திக் பாண்டியா வீசிய பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.அந்த விக்கெட்டிற்கு முன்பு அவர் பந்திற்கு மந்திரம் போல் ஏதோ ஒன்றை கூறியுள்ளார். அது ஜண்டா மத்திரம் என்றும் நெட்டிசன்கள் கருத்து கூறி விமர்சித்து வருகின்றனர்.
அதன்பின் நிதானமாக விளையாடி வந்த பாபர் அசாம் தனது அரை சதத்தை பூர்த்தி செய்ய கையோடு தன்னுடைய விக்கெட்டையும் இழந்தார். இருப்பினும் அணிக்கு ரன்களை குவிக்கும் எண்ணத்தில் முகமது ரிஸ்வான் 49 ரன்கள் அடித்தாலும் மற்ற பக்கத்தில் இருந்து யாரும் அவருக்கு சப்போர்ட் செய்து விளையாட முடியாததால் பாகிஸ்தான் அணி 42.5ஓவர்களில் 191 ரன்கள் அடித்து விக்கெட்டுகளையும் இணைந்தது.

192 என்று எளிதான இலக்கு நோக்கி களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கில் இந்திய அணிக்கு சிறப்பான ஒரு தொடக்கத்தை தந்தனர். இருவரும் தான் சந்தித்த முதல் பந்தியிலேயே பவுண்டரிகளை அடித்து அதிரடியுடன் போட்டியை தொடங்கினர். அதன் பின் கில் 16 ரன்கள் அடித்த நிலையில் விக்கெட்டை இழந்து வெளியேற அதன் பின்வந்து விராட் கோலியும் 16 ரன்களில் அவுட் ஆகி வெளியேறி அணி ஏமாற்றத்தை அளித்தார். இருப்பினும் மற்றொரு பக்கம் ரோகித் சர்மா பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களை நான்கு பக்கம் சிதறடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்.
அவருடன் ஷ்ரேயஸ் ஐயர் இணைந்து பந்துவீச்சை சிதறடித்து வந்தனர். ரோஹித் ஷர்மா தன்னுடைய அரை சதத்தையும் பூர்த்தி செய்தார். சதத்தை பூர்த்தி செய்வார் என எதிர்பார்த்த நிலையில் 86 ரன்னில் வெளியேறினர். அதன் பின் நிதானமாக விளையாடி கே எல் ராகுலும் ஷ்ரேயஸ் ஐயர் ரன்களை சேர்த்தனர். அதன் பின் அரை சதத்தை பூர்த்தி செய்த நிலையில் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார் ஷ்ரேயஸ் ஐயர். மேலும் வரலாற்றை சாதனையை தக்க வைத்து கொண்டது இந்திய அணி.



