அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக தற்போது ஆசிய கோப்பை போட்டியானது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூலம் உலக கோப்பை போட்டியில் விளையாடும் ஆசிய அணிக்கு நல்ல ஒரு பயிற்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடரில் முதலில் இதே ஆதிக்கம் செழித்தி வந்தது இந்திய அணி.

அதன் காரணமாக இந்தியா முதல் ஆளாக ஆசிய கோப்பை 2023 தொடரின் இறுதி போட்டிக்கு சென்றது. இதனையடுத்து பாகிஸ்தான் அணியை வீழ்த்திய இலங்கை அணி வரும் செப்டம்பர் 17ஆம் தேதி மாபெரும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணியானது பந்தவீசுவதாக அறிவித்தது. ஆனால் அது மிகப்பெரிய ஒரு தவறான விஷயம் என்று பின்னர் தான் அவர்களுக்கு தெரியவந்தது.
ஏனென்றால் பார்மில் இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா வீசிய முதல் ஓவரிலேயே துவக்க வீரர் குசால் பெரேரா ஸ்விங்காகி வந்த 3வது பந்தில் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுலிடம் எட்ஜ் வழங்கி டக் அவுட்டாகி சென்றார். பின்னர் முகமது சிராஜ் வீசிய 4வது ஓவரின் முதல் பந்தை தவறாக கணித்த பதும் நிசாங்கா 2 (4) ரன்களில் ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து வந்த சமரவிக்ரமா 3வது பந்தில் முகமது சிராஜ் 0 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் செய்தார்.

அந்த நிலைமையில் வந்த கடந்த அசலங்காவையும் விட்டு வைக்காத முகமது சிராஜ் கோல்டன் டக் அவுட்டாக்கி பந்தில் அனலை பறக்க விட்டார். அசலங்கா இம்முறை ஒரு பந்துக்கு மேல் தாக்கு பிடிக்க முடியாத அளவுக்கு சிராஜ் கடைசி பந்தில் 4 (2) ரன்களில் அவுட்டாக்கி ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை சாய்த்து இலங்கையின் கதையை ஆரம்பத்திலேயே முடித்தார் என்று சொல்லலாம். இதனால் அதற்கு பிறகு வந்த வீரர்கள் ஹர்திக் பாண்டியாவிடம் ஆட்டமிழக்க போட்டி இந்தியாவின் பக்கம் வந்தது.
W . W W 4 W! 🥵
— Star Sports (@StarSportsIndia) September 17, 2023
Is there any stopping @mdsirajofficial?! 🤯
The #TeamIndia bowlers are breathing 🔥
4️⃣ wickets in the over! A comeback on the cards for #SriLanka?
Tune-in to #AsiaCupOnStar, LIVE NOW on Star Sports Network#INDvSL #Cricket pic.twitter.com/Lr7jWYzUnR
அதனால் 10 ஓவரில் 31/6 என்ற துவக்கத்தை பெற்ற இலங்கை அணியானது 15.2 ஓவர்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்கள் மட்டுமே குவித்தது. இது இந்திய அணிக்கு எளிதான இலக்கு என்பதினால் இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினார்கள். இந்நிலையில் இந்திய அணியானது 6.1 ஓவர்களில் இந்திய அணியானது 51 ரன்கள் எடுத்து ஆசிய கோப்பை 2023 கோப்பையை வென்றது.




