
இந்திய அணியின் தேர்வுக் குழு சில வீரர்கள் மீது கடினமான முடிவுகளை எடுக்க உள்ளது என்று சுனில் கவாஸ்கர் கூறி இருந்தார். இந்திய அணியானது அடுத்த வருடம் நடக்கவுள்ள உலக கோப்பை டி20 போட்டிக்கு தயாராகி வருகிறது. அதற்கு இந்திய வீரர்களை தயார் படுத்தும் முயற்சியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து தொடர்களை கொண்ட T20 போட்டியானது தற்பொழுது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா அணி உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியிடம் வெற்றி பெற்று தற்போது இந்திய அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது.

அதில் மூன்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணியும் கடைசியாக நடந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றது. இதற்கு கேப்டனாக சூரிய குமார் யாதவ் இருந்து வருகிறார். ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்டதாலே சூரியகுமார் யாதவ் அதற்கு இந்த போட்டியில் கேப்டனாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோஹித் ஷர்மாவிற்கு பின்பு இந்திய அணியை யார் வழி நடத்துவார் என்று கேள்வியும் தற்போது எழுந்து வந்துள்ளது.
அதில் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் என இருவரும் இருக்கின்றார்கள். ஹர்திக் பாண்டியா குறித்து உடல் நலங்கள் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்து வந்து உள்ளது. கே.எல் ராகுல் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக அணியை வழிநடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பிசிசிஐ க்கும் பெரிய கேள்வியாக இருக்கின்றது இந்திய அணியின் அடுத்த கேப்டனாக யாரை நிர்ணயிப்பது என்பது குறித்து. கேப்டன் குறித்து எந்த ஒரு வீரரும் ஆர்வம் தெரிவிக்கவில்லை என்றும் தகவல்களும் வெளியாகி இருக்கின்றது. இந்திய அணி உலகக்கோப்பை வெல்லாதது பற்றி சுனில் கவாஸ்கர் ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளார்.

இறுதிப் போட்டியில் இந்திய அணி செய்த தவறுகளை ஏற்றுக்கொண்ட அடுத்த நடக்கும் தொடர்களை அவ்வாறு செய்யாமல் கோப்பையை வெல்ல முயற்சி செய்ய வேண்டும். ஒரு தவறை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நிச்சயமாக முன்னேறாது. அடுத்த சில வாரங்களில் சில வீரர்கள் மீது அணி நிர்வாகம் கடினமான முடிவில் இருக்கும் என்று நான் நினைக்கின்றேன். அது போல் இந்திய அணியின் 2007 ஆம் ஆண்டுக்கு பின் டி20 உலக கோப்பையில் வெற்றி பெறவில்லை. ஐபிஎல் போன்ற மிகச் சிறந்த தொடர்களை பயிற்சி பெற்றும் டி20 உலக கோப்பையில் இந்திய அணி வெல்லாதது மிகவும் வருத்தமாக இருக்கின்றது.

மேலும் அது இந்திய அணி ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கின்றது. ஒரு நாள் உலக கோப்பை முடிவடைந்து விட்டது அதனால் அடுத்த கட்ட பயணத்தை இந்திய அணி தொடங்க வேண்டும். கடைசியாக நடைபெற்ற நான்கு உலக கோப்பை தொடர்களில் இந்திய அணி இரண்டு முறை இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளது இரண்டு முறை அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று வெளியேறியுள்ளது. இதை மற்ற அணியுடன் ஒப்பிடும்போது இந்திய அணி சிறப்பாகவே உள்ளது. அதேபோல் ஆஸ்திரேலியா அணியும் இரண்டு உலகக் கோப்பைகளை வென்றுள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.





