இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட்கோலியும் 2022 t20 உலகக்கோப்பைக்கு பின்னதாக எந்த ஒரு டி20 போட்டியை விளையாடவில்லை. அவர்கள் இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பை போட்டியில் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வருடம் நடைபெறும் உலகக்கோப்பையில் 20 அணிகள் கலந்துகொள்ள உள்ளது. அதற்க்கு இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இந்திய அணியில் இருக்க வேண்டும் என்றும் இர்பான் பதான் கருத்து தெரிவித்த நிலையில் கங்குலியும் அவரது கருத்தை அவர் தெர்வித்து இருந்தார்.

நடந்து முடிந்த உலகக்கோப்பையில் விராட் கோலி தான் அதிக ரன்களை அடித்துள்ளார். அதற்க்கு அடுத்த படியாக ரோஹித் ஷர்மா இரண்டாவது இடத்தில் இருந்துள்ளார். விராட் கோலி 765 ரோஹித் ஷர்மா 597 ரன்களும் அடித்துள்ளனர். அவர்கள் பேட்டிங்கில் சிறந்த பார்மில் இருந்து வருகின்றனர். 2022 உலகக்கோப்பைக்கு பின்னதாக ரோஹித் ஷர்மா t20 போட்டியில் விளையாடத நிலையில் ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வந்தார்.
இந்நிலையில் வரும் உலகக்கோப்பையில் அவர் தான் கேப்டன்சி செய்வார் என்றும் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இந்திய அணியில் இருக்க மாட்டார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா கட்டயாம் அணியில் உலகக்கோப்பை 2024 டி20 போட்டியில் விளையாட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி கூறியிருந்தார். மேலும் அவர் கூறுகையில்,

“இந்தியா ஒரு நல்ல அணி. அது ஒரு போட்டியில் தோல்வியடைந்த பிறகு, மக்கள் அணி மோசமானது போல் பேசத் தொடங்குகிறார்கள். ஒருநாள் தொடர், டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது நல்ல அறிகுறி. விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.




