கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பைகள் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் இந்தியா தான் எனது இரண்டாவது வீடு என்று கூறியுள்ளார். உலகின் தலை சிறந்த பந்துவீச்சாளர்கள் ஒருவர் இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் விளையாட உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நான் பெற்ற ஏலத்தில் அதிக விலைக்கு போன இரண்டாவது இவர் என்ற பெருமையும் பெற்றிருந்தார்.

இவர் சென்ற ஹைதராபாத் அணிக்காக 20.50 கோடிக்கு அவரை ஹைதராபாத் அணி எடுத்தது. இவர் தான் ஹைதராபாத் அணியின் கேப்டனாக மார்க்கம்க்கு பிறகு சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருப்பார் என்றும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இந்தியாவில் விளையாடுவது குறித்தும் ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவில் விளையாடுவது குறித்தும் அவர் சிலவற்றை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறிகையில்,

“இந்தியா இரண்டாவது வீடு போன்றது. நாங்கள் இங்கு அதிக நேரம் செலவிடுகிறோம். ஐபிஎல்லில் உங்கள் சொந்த அணிகள் கிடைத்துள்ளன. எனவே உங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது போல் உணர்கிறீர்கள் அல்லது குறைந்தபட்சம் கிரிக்கெட் ரசிகர்களாவது எங்களுக்கு இருப்பார்கள் என உங்களுக்குத் தெரியும். எனவே எல்லோரும் உங்களுக்கு எதிராக இல்லை என்பது மகிழ்ச்சியான உணர்வு. என்றும் அவர் கூறினார்.
போட்டியின் நிலை குறித்து பேசிய கம்மின்ஸ், லீக்கில் பேட்டர்கள் அபாரமான திறமையைக் கொண்டிருப்பதால் பிழைக்கு இடமில்லை என்றார். நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். நான் ஒரு பெரிய நம்பிக்கை கொண்டவன். விராட்க்கு எதிராக வருவது எப்போதுமே நல்லது. அவர் என்னை சில முறை பெற்றுள்ளார். நான் அவரது விக்கெட்டுகளை சில முறை பெற்றுள்ளேன். அது எப்போதும் நன்றாக இருக்கிறது” என்று ஆஸ்திரேலியா டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் முடித்தார்.

ஐபிஎல் முதல் போட்டியானது மார்ச் 22 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சாம்பியன் அணியான சென்னை சூப்பர்கிங்க்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளது





