
T20 உலக கோப்பையானது அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்திய அணி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி இடம் இறுதிப் போட்டியில் தோல்வி தோல்வியை தழுவிய நிலையில் அடுத்த வருடம் உலக்கோப்பை போட்டியில் கோப்பையை வெல்ல வேண்டும் என்று முனைப்பில் இருக்கின்றது. இந்திய அணிக்கு கோப்பை என்பது கனவாகவே இருந்து வருகிறது. அடுத்த வருடம் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில் கோப்பையில் வேண்டுமென்று இந்திய அணி முனைப்போடு இந்திய அணி விளையாட உள்ளது.

ஆஸ்திரேலியா அணியிடம் இந்திய அணி உலகக்கோப்பை பின் 5 தொடர்களை கொண்ட டி20 போட்டியில் 4-1 என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 உலக கோப்பையானது அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா போன்ற பல்வேறு அணிகள் இந்த உலக கோப்பை போட்டியில் பங்கேற்க தயாராகி வருகிறது. அது மட்டுமல்லாமல் 2011 ஆம் ஆண்டு பிறகு அதிக அணிகளை கொண்ட உலக கோப்பை போட்டியாகவும் இது அமைய உள்ளது. அந்த அளவிற்கு உலகக் கோப்பை போட்டியில் 20 அணிகள் கலந்து கொள்ள தயாராகி உள்ளது. தற்போது இந்திய அணியின் தோல்வி குறித்து இந்திய வீரர் சாஹல் கூறுகையில்,
உலகக் கோப்பையில் நாங்கள் சிறந்த அணியாக இருந்தோம். நாங்கள் பந்துவீசிய விதத்தைப் பார்த்தால், நாங்கள் பேட்டிங் செய்யும் போது கூட ரோஹித் சர்மா நல்ல தொடக்கத்தைக் கொடுத்த விதம் மற்றவர்களுக்கு எளிதாக இருந்தது. அகமதாபாத்தில், விக்கெட் பெரும்பாலும் மெதுவாக உள்ளது மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் அது சிறப்பாகிறது. அது பனியா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் திடீரென்று இரண்டாவது இன்னிங்ஸில் ட்ரிங்க்ஸ் பிரேக்குக்குப் பிறகு அது வேறு ஆடுகளமாகத் தோன்றியது.
நிச்சயமாக அவர்கள் ஆஸ்திரேலியா திரும்பிய விதத்தில், மேக்ஸ்வெல் இரட்டை சதம் அடித்தார், அதில் அவர் PS5 அல்லது ஏதோ ஒன்றில் விளையாடுவது போல் உணர்ந்தார். கால் கூட அசையாமல் சிக்ஸர் அடித்துக் கொண்டிருந்தார். அவருக்கு பந்து வீசுவது மிகவும் கடினம். இறுதிப் போட்டியில் கூட டிராவிஸ் ஹெட் பேட்டிங் செய்த விதம் நம்பமுடியாததாக இருந்தது. முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்து பின்னர் உலகக் கோப்பையை வென்ற பிறகு மீண்டும் திரும்ப, அதனால்தான் அவர்கள் சாம்பியன்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.





